பெர்ன்: சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புத்தாண்டு தினம் நேற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சுவிட்சர்லாந்தில் நடந்த கொண்டாட்டத்தின்போது வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாக தகவல் பரவியது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
இதுகுறித்து சுவிட்சர்லாந்து அதிகாரிகள் கூறியதாவது: கிரேன்ஸ்- மோன்டனா நகராட்சிக்கு உட்பட்ட ஸ்கை ரிசார்ட்டில் உள்ள லீகான்ஸ்டெல்லேஷன் மதுபான மற்றும் ஓய்வு விடுதியில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக 150-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.
இசைக் கச்சேரி நடந்துகொண்டிருந்த போது திடீரென பெரிய வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், 40 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மதுபான விடுதியில் இசைக் கச்சேரியின் போது வெடிகள் வெடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தான் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வீடியோ வைரல் இருப்பினும், இந்த சம்பவத்துக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை என்று சுவிட்சர்லாந்து போலீஸார் தெரிவித்துள்ளனர். வெடி விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.