ஐசன்கோட், பெஞ்சமின் நெதன்யாகு

 
உலகம்

“சுழற்சி முறையில் பிரதமர் பதவி வகிக்கலாம்” - ஐசன்கோட்டுக்கு பெஞ்சமின் நெதன்யாகு யோசனை

இஸ்ரேலில் ஆட்சி அமைப்பதில் இழுபறி

செய்திப்பிரிவு

ஜெருசலேம்: கடந்த அக்​டோபர் 27 அன்று நடை​பெற்ற இஸ்ரேல் நாடாளு​மன்​றத் தேர்​தலில் மொத்​தமுள்ள 120 இடங்​களில் எந்​தவொரு அரசி​யல் கூட்​ட​ணிக்​கும் ஆட்சி அமைக்​கத் தேவை​யான 61 இடங்​கள் கிடைக்​க​வில்லை. இதனால் முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்​துக்கு மேலாகி​யும் புதிய அரசு அமைப்​ப​தில் இழுபறி நீடிக்கிறது.

ஆட்சி அமைக்​கத் தேவை​யான 61 இடங்​களுக்கு 8 இடங்​கள் குறைவாக, நெதன்​யாகு தலை​மையி​லான அணி 53 இடங்​களைப் பெற்​றது. ஐசன்​கோட்​டின் அணி 48 இடங்​களைப் பெற்​றது. அரபுக் கட்​சிகளான ரா’ம் மற்​றும் ஜாயின்ட் லிஸ்ட் ஆகியவை 19 இடங்​களைக் கைப்​பற்றி, ஆட்சி அமைப்​ப​தில் தீர்​மானிக்​கும் சக்​தியாக உரு​வெடுத்​துள்​ளன. ஆனால், அரபுக் கட்​சிகளு​டன் கூட்​டணி அமைப்​பதை நெதன்​யாகு​வும் ஐசன்​கோட்​டும் ஏற்​கெனவே நிராகரித்​து​விட்​டனர்.

இந்​தச் சூழலில், இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்​ஸாக் அரசு அமைக்க டிசம்​பர் 6-ம் தேதி வரை ஐசன்​கோட்​டுக்கு அவகாசம் அளித்​துள்​ளார். இத​னால் வேறு வழி​யின்​றித் தனது அதி​காரத்​தைத் தக்​கவைத்​துக்​கொள்​ளும் முயற்​சி​யாக, “முதல் பாதி​யில் ஐசன்​கோட் பிரதம​ராகப் பணி​யாற்​றட்​டும், இரண்​டாம் பாதி​யில் தான் பிரதம​ராகப் பொறுப்​பேற்​கிறேன்” என்ற சுழற்சி முறையை பெஞ்சமின் நெதன்​யாகு​வின் லிகுட் கட்சி அதி​காரப்​பூர்​வ​மற்ற வழிகளில் முன்​மொழிந்​து உள்​ளது.

நெதன்​யாகு​வின் இந்த ஆஃபரை ஏற்க ஐசன்​கோட்​டும் அவரது கூட்​ட​ணிக் கட்​சிகளும் கடும் தயக்​கம் காட்டி வரு​கின்​றன. ஊழல் வழக்​கு​களை எதிர்​கொண்டு வரும் நெதன்​யாகு, அரசு அமைப்​ப​தைத் தாமதப்​படுத்​தி​விட்டு இறுதி​யில் மீண்​டும் ஒரு பொதுத் தேர்​தலுக்கு வழிவகுத்​து​விடுவாரோ என்ற அச்​சம் எதிர்க்​கட்​சிகளிடையே நில​வு​கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT