உலகம்

வங்கதேசத்தில் இந்து இளைஞர் படுகொலை: இனரீதியான தாக்குதலா என விசாரணை

செய்திப்பிரிவு

டாக்கா: வங்​கதேசத்​தில் உள்ள எரி பொருள் நிரப்​பும் மையத்​தில் இந்து இளைஞர் ஒரு​வர் கார் ஏற்றி படு​கொலை செய்​யப்​பட்​டார். இது இனரீ​தி​யான தாக்​குதலா என போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

வங்​கதேசத்​தின் கோலண்டா மோர் என்ற பகு​தி​யில் கரிம் என்ற பெயரில் எரிபொருள் நிரப்​பும் மையம் உள்​ளது. இங்கு நேற்று முன்​தினம் காலை நான்கரை மணிக்கு கருப்பு நிற எஸ்​யுவி வாக​னம் ஒன்று எரிபொருள் நிரப்ப வந்​தது. எரிபொருள் நிரப்​பிய பின் பணம் செலுத்​தாமல் டிரைவர் வாக​னத்தை எடுக்க முயன்​றார். அப்​போது அங்கு பணி​யில் இருந்த இந்து இளைஞர் ரிபன் சாகா (30) கார் முன் நின்று மறித்​தார். ஆனால் அவர் மீது கார் மோதி​யது. அவரது உடல் நெடுஞ்​சாலை​யில் இழுத்​துச் செல்​லப்​பட்​டது.

இதைப் பார்த்த ஜாகிர் உசைன் என்ற மற்​றொரு ஊழியர் கார் பின்​னால் ஓடி​னார். அப்​போது ரிபன் சாகா​வின் உடல் தலை மற்​றும் முகத்​தில் பலத்த காயங்​களு​டன் நெடுஞ்​சாலை​யில் கிடந்​தது. இச்​சம்​பவம் குறித்து ராஜ்​பாரி சதார் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர். தப்​பிச் சென்ற காரை பறி​முதல் செய்த போலீ​ஸார், அதன் உரிமை​யாளர் அப்​துல் காசிம், ஓட்​டுநர் கமல் உசைன் ஆகியோரை கைது செய்​துள்​ளனர். இவர்​களில் அப்​துல் காசிம் வங்​கதேச தேசிய கட்​சி​யின் ராஜ்​பாரி மாவட்ட முன்​னாள் பொருளாளர் என்​பது தெரிய​வந்​துள்​ளது. வாக​னத்தை ஓட்​டிச் சென்​றது யார்? இச்​சம்​பவத்​துக்கு இனரீ​தி​யான தாக்​குதல் காரணமா என போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

வங்​கதேசத்​தில் சிறு​பான்​மை​யின​ராக இருக்​கும் இந்​துக்​கள் மீது சமீப​கால​மாக தொடர் தாக்​குதல் நடத்​தப்​பட்​டு வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT