உலகம்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சாஜிப் வாஜேத் ஜாய்க்கு கைது வாரன்ட்

செய்திப்பிரிவு

தாகா: வங்கதேச ​முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வின் மகன் சாஜிப் வாஜேத் ஜாய்க்கு வங்​கதேச சிறப்பு தீர்ப்​பா​யம் கைது வாரன்ட் பிறப்​பித்​துள்​ளது.

வங்​கதேசத்​தில் கடந்த ஜூலை மற்​றும் ஆகஸ்ட் மாதம் நடை​பெற்ற மாணவர் போராட்​டம் வன்​முறை​யாக மாறியது. இதில் 1,400 பேர் இறந்​தனர். இந்த கலவரத்​தால் வங்​கதேச பிரதம​ராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜி​னாமா செய்து விட்டு இந்தியா​வில் அடைக்​கலம் புகுந்​தார். அதன் முகமது யூனுஸ் தலை​மை​யில் அங்கு இடைக்​கால ஆட்சி நடை​பெற்​றது.

மாணவர் போராட்​டத்​தின் போது ஊரடங்கு உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்டு அடக்​கு​முறையை கையாண்​ட​தால் 1,400 பேர் இறந்ததாகவும், இது மனித நே​யத்​துக்கு எதி​ரான குற்​றம் என்​ப​தால், இதற்கு காரண​மான முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா, அப்போதைய உள்​துறை அமைச்​சர் அசாதுச​மான் கான் கமல் ஆகியோ​ருக்கு வங்​கதேசத்​தின் சர்​வ​தேச குற்ற தீர்​ப்பா​யம் கடந்த மாதம் மரண தண்​டனை விதித்​தது.

ஷேக் ஹசீ​னா​வின் ஆலோ​சக​ராக பணி​யாற்​றிய அவரது மகன் சாஜிப் வாஜேத் ஜாய் தற்​போது அமெரிக்​கா​வில் உள்​ளார். மனிதநே​யத்​துக்கு எதி​ரான குற்​றச்​சாட்டு தொடர்​பாக அவரிடம் விசா​ரணை நடத்த வங்​கதேச சிறப்பு தீர்ப்​பா​யம் தற்​போது கைது வாரன்ட்​ பிறப்​பித்​துள்​ளது.

SCROLL FOR NEXT