ராணா பிர​தாப்

 
உலகம்

வங்கதேசத்தில் மேலும் ஓர் இந்து இளைஞர் கொலை

செய்திப்பிரிவு

டாக்கா: இந்​தி​யா​வின் அண்டை நாடான வங்​கதேசத்​தில் முஸ்​லிம்​கள் பெரும்​பான்​மை​யாக வசிக்​கின்​றனர். அந்த நாட்​டில் அண்​மை​க்கால​மாக இந்​துக்​கள் கொடூர​மாக கொலை செய்​யப்​பட்டு வரு​கின்​றனர்.

கடந்த டிச.18-ல் மைமன்​சிங் பகு​தியை சேர்ந்த தீபு சந்​திரா அடித்​துக் கொல்​லப்​பட்​டார். டிச. 24-ல் ராஜ்​பாரி பகு​தியை சேர்ந்த அம்​ரித் மண்​டல் கொலை செய்​யப்​பட்​டார். கடந்த 29-ல் மைமன்​சிங் பகு​தியை சேர்ந்த பிஜேந்​திர பிஸ்​வாஸ் துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார்.

இந்த சூழலில் வங்​கதேசத்​தின் ஜெஸ்​ஸோர் மாவட்​டம், ஆருவா கிராமத்தை சேர்ந்த ராணா பிர​தாபை (35) மர்ம நபர்​கள் நேற்று துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொன்​றனர்.

முன்​னணி நாளிதழின் மூத்த ஆசிரிய​ராக அவர் பணி​யாற்றி வந்​தார். இதுதொடர்​பாக போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT