

நிகிதா, அர்ஜுன்
நியூயார்க்: அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் முன்னாள் காத லியை கொலை செய்துவிட்டு இந்தியா தப்பி வந்தவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் எலிகாட் நகரில் வசித்தவர் இந்தியப் பெண் நிகிதா கொடிஷலா. இவரை காணவில்லை என்று இவரது முன்னாள் காதலன் அர்ஜூன் சர்மா என்பவர் போலீஸில் கடந்த 2-ம் தேதி புகார் அளித்தார்.
நிகிதா கடைசியாக கடந்த டிசம்பர் 31-ம் தேதி மேரிலாண்ட் நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார் எனவும் அவர் கூறினார். புகார் கொடுத்த அன்றே அர்ஜுன் சர்மா இந்தியா தப்பிவிட்டார். மறுநாள் அவரது வீட்டில் போலீஸார் சோதனை செய்தபோது, அங்கு நிகிதா கத்திக் குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இவரை கடந்த டிசம்பர் 31-ம் தேதி இரவு அர்ஜுன் சர்மா கொலை செய்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
இதையடுத்து நிகிதா குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்த இந்திய தூதரகம் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. இவர் தெலுங்கு பெண் என தெரியவந்துள்ளது.
அர்ஜூன் சர்மாவை கைது செய்ய இன்டர்போல் உதவியை அமெரிக்க போலீஸார் நாடினர். இதையடுத்து இந்தியா தப்பி வந்த அர்ஜுன் சர்மா தமிழகத்தில் கைது செய்யப்பட்டார்.