உலகம்

“அறிவார்ந்த மனிதர்” - பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் பாராட்டு

செய்திப்பிரிவு

நியூயார்க்: ஜவஹர்​லால் நேரு​வின் சாதனையை முறியடித்​து, இந்தி​யா​வில் மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்டு மிக நீண்ட காலம் பிரதமர் பதவியை வகித்​தவர் என்ற பெரு​மையை நரேந்​திர மோடி பெற்​றுள்​ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்த வாழ்த்துச் செய்தியில், “இந்​தி​யா​வின் மிக நீண்ட காலம் பதவி​யில் இருக்​கும் பிரதம​ர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ள எனது நண்​பர், நரேந்​திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்​துகள். அவர் உண்​மை​யிலேயே ஒரு மாபெரும் தலை​வர்.

அவர் மிக​வும் வலிமை​யான வர், ஆரோக்​கிய​மானவர், மற்​றும் அறி​வார்ந்த மனிதர். வரும் ஆண்​டு​களி​லும் அவர் இதேபோன்ற சாதனைகளை படைப்​பார்” என கூறியுள்ளார். இதையடுத்து அதிபர் ட்ரம்ப்​புக்கு பிரதமர் மோடி நன்றி தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT