உலகம்

ஏர் கனடா விமானம் விபத்து: நியூயார்க் விமான நிலையத்தில் 2 விமானிகள் உயிரிழப்பு; 72 பயணிகள் தப்பினர்

செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் உள்ள லாகார்​டியா சர்​வ​தேச விமான நிலை​யத்​தில், தரையிறங்கிய ஏர் கனடா எக்​ஸ்​பிரஸ் பயணி​கள் விமானம் அங்கு நின்​றிருந்த தீயணைப்பு வாக​னத்​தின் மீது மோதி விபத்​துக்​குள்​ளானது. இந்த விபத்​தில் விமானத்தின் முதன்மை விமானி மற்​றும் துணை விமானி ஆகிய இரு​வர் உயி​ரிழந்​தனர்.

இதுகுறித்து விமான நிலைய வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கனடா​வின் மாண்ட்​ரியல் நகரில் இருந்து 72 பயணி​கள் மற்​றும் 4 ஊழியர்​களு​டன் புறப்​பட்ட ‘ஏர் கனடா எக்​ஸ்​பிரஸ்' நிறு​வனத்​திற்​குச் சொந்​த​மான சி.ஆர்​.ஜே-900 ரக விமானம், ஞாயிற்​றுக்​கிழமை இரவு 11.37 மணி​யள​வில் லாகார்​டியா விமான நிலை​யத்​தில் தரை​யிறங்​கியது.

          

அப்​போது ஓடு​தளம் 4-ல் சுமார் 24 மைல் வேகத்​தில் அந்த விமானம் சென்​று​கொண்​டிருந்​த​போது, எதிர்​பா​ராத​வித​மாக அங்கு நின்​றிருந்த தீயணைப்பு வாக​னத்​தின் மீது பலமாக மோ​தி​யது. இந்த விபத்​தில் விமானத்​தின் முன்​பகுதி பலத்த சேதமடைந்​தது. இதில் விமானத்தை இயக்​கிய முதன்மை விமானி மற்​றும் துணை விமானி ஆகிய இரு​வரும் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.

தீயணைப்பு வாக​னத்​தில் இருந்த ஒரு சார்​ஜென்ட் மற்​றும் ஒரு காவலர் ஆகிய இரு​வருக்கு பலத்த எலும்பு முறிவு ஏற்​பட்​டது. இதையடுத்து அவர்​கள் உடனடி​யாக மீட்​கப்​பட்டு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். அவர்​களின் நிலைமை தற்​போது சீராக உள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், விமானத்​தில் இருந்த பயணி​களில் சிலருக்கு லேசான காயம் ஏற்​பட்​டதுடன் 72 பயணி​களும் உயிர்​தப்​பினர்.

விபத்​தைத் தொடர்ந்​து, லாகார்​டியா விமான நிலை​யத்தை அமெரிக்க மத்​திய விமானப் போக்​குவரத்து ஆணை​யம் தற்​காலிக​மாக மூடியது. அவசர​கால மீட்​புப் பணி​கள் மற்​றும் முதற்​கட்ட விசா​ரணையை முன்​னிட்டு இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.இதனால் அங்கு தரை​யிறங்க வேண்​டிய சுமார் 18-க்​கும் மேற்​பட்ட வி​மானங்​கள் வேறு வி​மான நிலை​யங்​களுக்​குத் திருப்​பி விடப்​பட்​டன. இவ்​வாறு அந்​த வட்​டாரங்​கள்​ தெரி​வித்​தன.

SCROLL FOR NEXT