டெஹ்ரான்: அமெரிக்காவுடன், ஈரான் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்ய அதிபர் ட்ரம்ப் நெருக்கடி கொடுத்து வருகிறார். ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளதால், அங்கிருந்து எந்த எண்ணெய் கப்பலும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதனால் ஈரானின் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் நிரம்பி விட்டன. ஈரான் துறைமுகங்களில் தற்போது நிற்கும் 41 கப்பல்களில் 6.9 கோடி பேரல் எண்ணெய் உள்ளது, இதை ஈரானிய அரசால் விற்க முடியாது என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.