பெண்​களிடம் மட்​டுமே இப்​படியொரு கேள்வி ஏன்? - நடிகை மலைகா அரோ​ரா ஆதங்கம்

பெண்​களிடம் மட்​டுமே இப்​படியொரு கேள்வி ஏன்? - நடிகை மலைகா அரோ​ரா ஆதங்கம்
Updated on
1 min read

பிரபல இந்தி நடிகை​யான மலைகா அரோ​ரா, திரைத்​துறை​யில் 30 ஆண்​டு​களைக் கடந்து நடித்து வரு​கிறார். சமீபத்​தில் அவர் அளித்த பேட்​டி​யில் சமூகத்​தில் நில​வும் பாலினப் பாரபட்​சம் குறித்து ஆதங்​கத்தை வெளிப்​படுத்​தி​னார்.

அவர் கூறும்​போது, “எனது தோற்​றம் குறித்து பாராட்​டு​கள் குவிந்​தா​லும், மற்​றொரு பக்​கம் வயதாவது குறித்த கவலை ஏற்​படு​கிற​தா? என்று கேட்​கின்​றனர்.

இது ஒரு இரட்டை முனை கத்தி போன்​றது. சில நேரங்​களில் இந்த எண்​ணம் என் மனதைக் கடந்து செல்​லும்; நான் என்​னையே கேள்வி கேட்​டுக்​கொள்​வேன். ஆனால் மற்ற நேரங்​களில், இதைப் பற்றி கவலைப்​படு​வ​தில்​லை. ஏனென்​றால் நான் விரும்​புவதைச் செய்​கிறேன், அதை அனுபவிக்​கிறேன். நான் இப்​போது​தான் என் வாழ்​வின் மிகச்​சிறந்த கால​கட்​டத்​தில் இருப்​ப​தாக உணர்​கிறேன்.

அதே நேரம், முன்பு அழகாக இருந்​தீர்​கள், இப்​போது வயதாகி​விட்​டதே, இப்​போதும் கவர்ச்​சி​யாக உணர்​கிறீர்​களா? என்ற கேள்வி​கள் பெண்​களை நோக்கி மட்​டுமே வீசப்​படு​கின்​றன. இதே போன்ற கேள்​வியை ஒரு ஆணிடம் யாரும் கேட்டு பார்த்​ததுண்​டா? ஆண்​களிடம் அவர்​களது வயது குறித்து யாரும் கேள்வி கேட்​ப​தில்​லை. எனக்கு வயது என்​பது முட்​டுக்​கட்டை அல்ல. இன்​னும் நிறைய சாதிக்க வேண்​டும் என்ற பசி​யுடன் இருக்​கிறேன். அந்த ஆர்​வம் இருக்​கும்​போது, வயதான தோற்​றம் என்​பது என்​னைப் பாதிப்​ப​தில்​லை.

உடல் ரீதி​யான தோற்​றம் மட்​டுமே முக்​கியமல்ல. மனநிலை மற்​றும் உணர்ச்சி ரீதி​யான பலத்​துடன் அதைச் சமநிலைப்​படுத்த வேண்​டும். உங்​களை இயக்​கும் சக்தி எது? ஒவ்​வொரு நாளும் எழுந்​து, ‘இந்த நாளை வென்று காட்​டு’ என்று உங்​களைத் தூண்​டு​வது எது? என்​பது​தான் முக்​கி​யம். அதனால் ஒவ்​வொரு முறை​யும் கண்​ணாடியை பார்த்​து, ‘நான் அழகாக இருக்​கிறேன்’ என்று நினைத்​துக்​கொண்டு முழிப்​ப​தில்​லை. இன்று ஒரு புதிய நாள், இதைச் சரி​யாகப் பயன்​படுத்த வேண்​டும். எதை​யா​வது புதி​தாக உரு​வாக்க வேண்​டும் என்ற எண்​ணத்​துடனேயே நான்​ எழுகிறேன்​” எனத்​ தெரி​வித்​தார்.

பெண்​களிடம் மட்​டுமே இப்​படியொரு கேள்வி ஏன்? - நடிகை மலைகா அரோ​ரா ஆதங்கம்
94 வயது பழம்​பெரும் இயக்குநர் சிங்​கீதம் சீனி​வாச​ ராவின் ‘சிங் கீதம்’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in