உலகம்

வங்கக் கடலில் 2 படகுகள் கவிழ்ந்ததில் ரோஹிங்கியா அகதிகள் 500 பேர் உயிரிழப்பு?

செய்திப்பிரிவு

சிட்னி: மியான்மர் மற்​றும் வங்கதேச அகதிகள் முகாமில் இருந்து 2 படகு​களில் மலேசி​யா​வுக்கு புறப்​பட்ட ரோஹிங்கியா அகதிகள் 500-க்​கும் மேற்​பட்​டோர் வங்கக் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தவல்​கள் தெரிவிக்​கின்​றன.

மியான்​மரில் கடந்த 2017-ம் ஆண்டு ரோஹிங்​கியா முஸ்லிம்களை பாது​காப்புப் படை​யினர் விரட்​டியடித்​தனர். அப்போது அங்கு இனப் படு​கொலை நடை​பெற்​றது. சுமார் 12 லட்சம் ரோஹிங்​கி​யாக்​கள் மியான்​மரில் இருந்து வெளி​யேறி வங்கதேசத்​தில் உள்ள அகதி முகாம்​களில் தங்​கி உள்ளனர். இந்நிலை​யில் மியான்​மரின் மேற்கு ராகைன் மாநிலத்​திலிருந்து கடந்த ஜுன் மாத இறு​தி​யில் இரு படகு​கள் மலேசியா புறப்பட்டுள்ளன.

இவற்​றில் மியான்​மர் மற்​றும் வங்​கதேச அகதி முகாம்​களில் இருந்த 500-க்​கும் மேற்​பட்​டோர் பயணித்​துள்​ளனர். 250 பேரை ஏற்றிச் சென்ற ஒரு படகு புறப்​பட்ட சிறிது நேரத்​திலேயே தொடர்பை இழந்​தது. 280 பேரை ஏற்​றிச் சென்ற மற்​றொரு படகு கடந்த 8-ம் தேதி அன்று மியான்​மரின் அயேயர்​வாடி கடற்​கரைக்கு அப்​பால் மூழ்​கிய​தாக சர்​வ​தேச புலம்​பெயர்ந்​தோர் அமைப்பு (ஐஓஎம்), ஐக்​கிய நாடு​கள் அகதி​களுக்​கான ஆணை​யம் (யுன்​எச்​சிஆர்) ஆகியவை வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் தெரிவித்துள்ளது.

மியான்​மர் கடல்​சார் அதி​காரி​கள் பலமுறை ரோஹிங்கியாக்களை கடலிலேயே தவிக்​க​விட்​டுள்​ளனர். ஆபத்தில் இருக்​கும் படகு​கள் குறித்த தகவல்​களை அவர்​கள் அலட்​சி​யப்​படுத்தியுள்ளனர். வங்​கக் கடலில் ரோஹிங்​கி​யாக்​கள் சென்ற 2 படகுகள் கவிழ்ந்​த​தில் அதில் பயணம் செய்த 500-க்​கும் மேற்​பட்​டோர் உயிரிழந்​திருக்​கலாம் என கூறப்​படு​கிறது. இது அதிகாரப்​பூர்​வ​மாக உறு​திப்​படுத்​தப்​பட​வில்லை என்​றாலும், இதுகுறித்து சர்​வ​தேச புலம்​பெயர்ந்​தோர் அமைப்​பு, ஐக்​கிய நாடுகள் சபையின் அகதிகளுக்​கான ஆணை​யம் ஆகியவை ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT