உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 47 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஜகார்த்தா: இந்​தோ​னேசி​யா​வின் வடமேற்​கிலுள்ள எண்டே பகு​தி​யில் இருந்து 68 கி.மீ. தொலை​வில் வடகடலோரத்​தில் உள்ள புளோரெஸ் தீவில் நேற்று அதி​காலை 3.30 மணி​யள​வில் சக்தி வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. அது ரிக்​டர் அளவு​கோலில் 7.7 ஆக பதி​வானது.

இதைத் தொடர்ந்​து, அதே பகு​தி​யில் மேலும் ஒரு நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. அது 7.4 என ரிக்​டர் அளவு​கோலில் பதி​வான​தாக இந்​தோ​னேசிய தேசிய நில அதிர்வு மையம் (என்​சிஎஸ்) தெரி​வித்​துள்​ளது. இந்த நிலநடுக்​கம் 49 கிலோமீட்​டர் ஆழத்​தில் ஏற்​பட்​ட​தாக என்​சிஎஸ் தெரி​வித்​துள்​ளது.

இதையடுத்து கிழக்கு நுசா தெங்​க​ரா, தெற்கு சுல​வேசி மற்​றும் மேற்கு நுசா தெங்​கரா மாகாணங்​களில் சுனாமி எச்​சரிக்கை விடப்​பட்​டது. குறிப்​பாக கடலில் 1.6 அடி முதல் 9.8 அடி வரை அலைகள் மேலே எழும்​பும் என்று எச்​சரிக்கை விடப்​பட்​டது. பின்​னர் இந்த சுனாமி எச்​சரிக்கை திரும்​பப் பெறப்​பட்​டது.

இந்த நிலநடுக்​கம் காரண​மாக உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 47 ஆக உயர்ந்​துள்​ளது. மேலும் காயமடைந்த நூற்​றுக்​கும் மேற்​பட்​டோருக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. அங்கு தொடர்ந்து மீட்​புப் பணி​கள் முழு வீச்​சில் நடை​பெற்ற வரு​கின்​றன.

நிலநடுக்​கம் காரண​மாக பல இடங்​களில் மின்​சார இணைப்பு துண்​டிக்​கப்​பட்​டதுடன், தகவல் தொடர்​பும் பாதிக்​கப்​பட்டு உள்​ளது. இதனால், தேடு​தல் மற்​றும் மீட்​புப் பணி​களும் பாதிப்​படைந்து உள்​ளன. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக பல்​வேறு மருத்​து​வ​மனை​களில் உள்ள நோயாளி​கள் மீட்​கப்​பட்டு வேறு இடங்​களுக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர்.

நிலநடுக்​கம் காரண​மாக பல நகரங்​களில் கட்​டிடங்​கள் இடிந்து விழுந்​தன. பெரிய அளவில் பாதிப்​பு​கள் ஏற்​பட்​ட​தால் உயி​ரிழப்பு அதி​கரிக்​கக்​கூடும் என அஞ்​சப்​படு​கிறது. நிலநடுக்​கத்​தால் பலர் தங்​கள் வீடு​களை விட்டு திறந்​தவெளி இடங்​களி​லும், சாலை​யோரங்​களி​லும் தங்​கி​யுள்​ளனர்.

இந்​தோ​னேசி​யா​வில் கடந்த 1992-ல் பயங்கர நிலநடுக்​கம் ஏற்​பட்டு 2,500 பேர் உயி​ரிழந்​தனர். அதன் பின்​னர் 2004-ல் ஏற்​பட்ட சுனாமி​யால் இங்கு பெரும் பா​திப்பு ஏற்​பட்​டது. சுனாமி​யின்​போது இந்​தோ​னேசி​யா​வில் சுமார் 1.72 லட்​சம் பேர் இறந்​தனர்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT