உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது தொடர்பாக பிரிட்டன் தலைமையில் 40 நாடுகள் ஆலோசனை

செய்திப்பிரிவு

லண்டன்: ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் தடையற்ற சரக்கு கப்பல் போக்​கு​வரத்தை உறுதி செய்​வது தொடர்​பாக பிரிட்டன் தலை​மை​யில் 40 நாடு​கள் நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தின. அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே போர் நடை​பெற்று வரு​கிறது.

இதனால் ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் ராணுவம் முழுமை​யாக மூடி​யிருக்​கிறது. இதனால் சவுதி அரேபி​யா, கத்தார், ஐக்​கிய அரபு அமீரகம், குவைத் உள்​ளிட்ட வளைகுடா நாடு​களின் கச்சா எண்​ணெய், எரி​வாயு ஏற்றுமதி முடங்​கி​யிருக்​கிறது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள், எரி​வா​யுவுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டிருக்​கிறது.

இந்த சூழலில் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் தடையற்ற சரக்கு கப்​பல் போக்​கு​வரத்தை உறுதி செய்​வது தொடர்​பாக பிரிட்​டன் தலை​மை​யில் 40 நாடு​களின் பிர​தி​நி​தி​கள் நேற்று காணொலி வாயி​லாக முக்​கிய ஆலோ​சனை நடத்தினர். பிரிட்​டிஷ் வெளி​யுறவு அமைச்​சர் யெவெட் கூப்பர் கூட்​டத்​துக்கு தலைமை வகித்​தார்.

          

பிரான்​ஸ், ஜெர்​மனி, இத்​தாலி, கனடா, ஆஸ்​திரேலி​யா, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 30-க்​கும் மேற்​பட்ட நாடுகளின் அமைச்​சர்​கள், பிர​தி​நி​தி​கள் கூட்​டத்​தில் காணொலி வாயி​லாக பங்​கேற்​றனர். இக்கூட்​டத்தை அமெரிக்கா புறக்​கணித்​தது. அப்​போது பிரிட்​டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்​மர் கூறும்​போது, “ராணுவ நடவடிக்கை இல்லாமல் ஹார்​முஸ் ஜலசந்​தியை திறக்க ராஜ்ஜிய ரீதியிலான முயற்​சிகளை மேற்​கொள்​வது அவசி​யம். இதற்கு சாத்​தி​ய​முள்ள அனைத்து வழிகளை​யும் ஆராய்வோம்” என்று தெரி​வித்​தார்.

ஈரானுக்கு எதி​ரான போரில் அமெரிக்கா​வுடன் இணைய ஐரோப்​பிய நாடு​கள் மறுத்​து​விட்​டன. இதனால் அமெரிக்கா​வுக்​கும் ஐரோப்​பிய நாடு​களுக்​கும் இடையே விரிசல் ஏற்​பட்​டிருக்​கிறது.

உக்​ரைன் போர் காரண​மாக ரஷ்​யா​விடம் இருந்து எரிபொருள், எரி​வாயு வாங்​கு​வதை ஐரோப்​பிய நாடு​கள் கடந்த 2022-ம் ஆண்​டில் நிறுத்திவிட்டன.

தற்​போது நார்​வே, அமெரிக்கா உள்​ளிட்ட நாடு​கள் ஐரோப்​பா​வின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்து வரு​கின்​றன. எனினும் போலந்​து, இத்​தாலி உள்ளிட்ட நாடுகள் தங்​களின் எரிபொருள் தேவைக்கு வளை​குடா நாடு​களை நம்பி உள்​ளன.

இந்தியா பங்கேற்பு

இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பிரிட்டிஷ் அரசு சார்பில் இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையேற்று இந்திய வெளியுறவுச் செயலாளர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார்" என்று தெரிவித்தார். இதன்படி டெல்லியில் இருந்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி காணொலி வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்டார். மத்திய கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

SCROLL FOR NEXT