கோப்புப்படம்

 
உலகம்

பலூச் படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 25 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்​தானின் மிகப்​பெரிய மாகாண​மான பலுசிஸ்​தானில் பலூச் விடு​தலைப் படை (பிஎல்ஏ) நடத்​திய இரு வேறு தாக்​குதல்​களில் பாகிஸ்​தான் ராணுவ வீரர்​கள் 25 பேர் உயி​ரிழந்​தனர்.

பாகிஸ்​தானின் மிகப்​பெரிய மாகாணம் பலுசிஸ்​தான். அங்கு அரசி​யல் அடக்​கு​முறை மற்​றும் ராணுவ கெடு​பிடிகளுக்கு எதி​ராக பிரி​வினை​வா​தி​கள் சுயாட்சி கோரி போராடி வரு​கிறார்​கள்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் ஜியாரத் கிராஸ் பகு​தி​யில் ராணுவ வாக​னங்​கள் மீது ‘ஃபாத்தே ஸ்கு​வாட்’ படை நடத்​திய தாக்​குதலில் 18 வீரர்​களும், ஹாஜிகா பகு​தி​யில் சிறப்பு அதிரடிப் படை நடத்​திய தாக்​குதலில் 7 வீரர்​களும் கொல்​லப்​பட்​ட​தாக பிஎல்ஏ தெரி​வித்​துள்​ளது.

இதையடுத்​து, பாகிஸ்​தான் ராணுவம் நடத்​திய பதில் தாக்​குதலில் பிஎல்ஏ மற்​றும் தெஹ்ரீக்​-இ-​தாலி​பான் அமைப்​பு​களைச் சேர்ந்த 48 பேர் கொல்​லப்​பட்​ட​னர்.

SCROLL FOR NEXT