உலகம்

அமெரிக்காவில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை: உடலை விரைவாக தாயகம் கொண்டுவர வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்​கா​வில் 2 இந்தியர்கள் வெவ்​வேறு சம்பவங்களில் சுட்​டுக் கொல்​லப்​பட்டனர். அவர்களின் உடலை தாயகம் கொண்டுவர வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

பஞ்​சாப் மாநிலம் கபூர்​தலா மாவட்​டத்​தைச் சேர்ந்த குர்​தீப் சிங் (28), அமெரிக்​கா​வின் நியூ​யார்க்​கில் பீட்சா டெலிவரி செய்​யும் வேலை பார்த்து வந்​தார். நேற்று முன்​தினம் இரவு ரிச்​மண்ட் ஸ்ட்ரீட் பகு​தி​யில் பீட்சா டெலிவரி செய்ய சென்​றார். அப்​போது அங்கு வந்த மர்ம நபர்​கள் குர்​தீப் சிங்கை தாக்கி கொள்ளையடிக்க முயன்​றனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரி​வித்ததால் மர்ம நபர்​கள் துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்பி சென்றனர்.

இதில் குர்​தீப் சிங் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார். இந்நிலையில், கொலை​யாளி​களை கைது செய்​து, கடுமை​யான தண்​டனை வழங்​கு​மாறு அமெரிக்க அரசை​ வலி​யுறுத்​தி​யுள்ளனர்.

இதனிடையே, அமெரிக்​கா​வின் டென்​னிசி மாகாணத்​தில் உள்ள ஜாக்​சன் நகரில் குஜ​ராத் மாநிலத்​தைச் சேர்ந்த சுரேஷ் பர்​சோத்​தம்​தாஸ் (56) என்​பவர் கடந்த சில தினங்​களுக்கு முன்பு டிபார்​மெண்ட்​டல் ஸ்டோர் திறந்​தார். கடந்த 20-ம் தேதி இரவு இந்த கடைக்​குள் புகுந்த மர்ம நபர் சுரேஷை துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு பணத்​தைக் கொள்​ளை​யடித்​துச் சென்​றார். இதில் சுரேஷ் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

அமெரிக்​கா​வில் அடுத்​தடுத்து 2 இந்​தி​யர்​கள் சுட்​டுக்​கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் அவர்களுடைய குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்​சி​யை ஏற்​படு​த்​தி உள்​ளது. மேலும் கொல்லப்பட்ட இந்த 2 பேரின் உடலையும் விரைவாக தாயகம் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT