மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக எஸ்சி, எஸ்டி மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு

வெளி மாநில உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகின்றனர்.

வெளி மாநில உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகின்றனர்.

Updated on
2 min read

சென்னை: பழங்​குடி​யினர் நலத்​ துறை​யின் கீழ் 36 உண்டு உறை​விட அரசுப் பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன. இங்கு பயிலும் மாணவர்​கள்

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, எம்ஐடி, ஐஐஐடி போன்ற உயர்​கல்வி நிறு​வனங்​களில் சேரும் வகையில் நீட், ஜேஇஇ, கிளாட், ஐஎம்யு போன்ற போட்டி தேர்​வு​களில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்​சிகளை பழங்​குடி​யினர் நலத் ​துறை வழங்கி வரு​கிறது.

அதன்​படி, இந்​த ஆண்டு 357 மாணவர்​கள் பல்​வேறு மாநிலங்​களில் படிக்கச் சென்​றுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. இதுகுறித்து ‘குமிழி’ அரசு பயிற்சி மையத்​தின் தலைமை ஆசிரியர் சுமதி கூறிய​தாவது: பல தடைகளையும் தாண்டி வெளிவருவது மாணவர்​களுக்கு சவாலான ஒன்​று.

அதை தாண்டி படிக்க அவர்​களுக்கு ஊக்​கமளித்து வழிநடத்திச் செல்​கிறோம். அதன்​படி, வாசுகி பவுண்​டேஷனுடன் இணைந்து மாணவர்​களுக்கு பயிற்​சி​அளித்து வரு​கிறோம்.

42 போட்​டித் தேர்​வு​களுக்கு பயிற்சி அளித்து, எங்​களது மாணவர்​கள் ஐஐடி, எம்ஐடி, நிஃப்ட், என்​ஐடி ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்​ளனர்.

இந்​த ஆண்டு ஆதி​தி​ரா​விடர் மாணவர்​கள் 80 பேர், பழங்​குடி​யின மாணவர்​கள் 277 பேர் போட்டித் தேர்​வில் வென்று படிக்கச் சென்​றுள்​ளனர்.

<div class="paragraphs"><p>கமலேஷ்</p></div>

கமலேஷ்

முதல் முறை​யாக ராஜீவ் காந்தி நேஷனல் ஏவி​யேஷன் பல்​கலைக்​கழகத்​தில் பழங்​குடி​யின மாணவர் ஒரு​வர் படிக்கத் தேர்​வாகி உள்​ளார். தேசிய சட்டப் பல்​கலைக்​கழகத்​தில் இருளர் சமூகத்தை சேர்ந்த மாணவர் சேர்க்கை பெற்றுள்​ளார். இவ்​வாறு அவர் கூறி​னார்.

கேரள ஐஐஐடி​யில் சேர்ந்​துள்ள மாணவர் கமலேஷ் கூறி​ய​தாவது: எனது சொந்த ஊர் சேலம் மாவட்​டம் கெங்​கவல்லி கிராமம். பெற்​றோர் இரு​வரும் விவ​சாய கூலித் தொழிலா​ளர்கள்.

நான் பள்ளியில் படிக்​கும் போதே, உயர்கல்வி நிறு​வனத்​தில் சேர வேண்டும் என்று பழங்​குடி​யின நலத்​துறை ஆணை​யர் அண்​ணாதுரை ஊக்கப்படுத்தி​னார்.

அதே​போல, சமூகநீதி துறை செயலர் சுப்​பையன் வழி​காட்​டு​தல்​படி, ‘குமிழி’ பயிற்சி மையம் மூலம் பயின்று ஜேஇஇ தேர்​வில் 78 சதவீதம் பெற்று கேரள​மாநிலம் கோட்​ட​யத்​தில் உள்ள ஐஐஐடி நிறு​வனத்​தில் பி.டெக் படித்து வரு​கிறேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதுகுறித்து சமூகநீ​தி துறை அமைச்​சர் வன்​னியரசு கூறிய​போது, “முதல்முறை​யாக ஏவி​யேஷன் துறை​யில் எங்கள் மாணவர்கள் தடம் பதித்ததில் மகிழ்ச்​சி.

இடஒதுக்​கீட்டை தாண்டி மாணவர்​கள் சேர்க்கை அதி​கரித்​துள்​ளது. முதல்​வரின் ஆணைப்​படி, இடைநிற்​றல் மாணவர்​கள் மீதும் கவனம் செலுத்தி நல்​வழிப்​படுத்​தும் பணி​களில்​ அரசு தொடர்ந்​து ஈடு​பட்​டு வரு​கிறது” என்​றார்​.

- மணிகண்டன் ஆறுமுகம்

<div class="paragraphs"><p>வெளி மாநில உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகின்றனர்.</p></div>
மத்திய அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in