உலகம்

மோடி, நெதன்யாகு முன்னிலையில் இந்தியா - இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள்

செய்திப்பிரிவு

டெல் அவிவ்: பிரதமர் நரேந்​திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு முன்​னிலை​யில் இந்​தி​யா - இஸ்​ரேல் இடையே 17 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு நேற்று முன்​தினம் இரவு விருந்து அளித்​தார். அப்​போது பிரதமர் மோடி போல, இந்​திய பாரம்​பரிய உடையை அவர் அணிந்​திருந்​தார். மோடி ஜாக்​கெட், குர்தா அணிந்​திருந்த அவர், மோடியை ஆரத் தழுவி வரவேற்​றார்.

          

முன்​ன​தாக, இருவரும் இணைந்து ஜெருசலேமில் நடை​பெற்ற தொழில்​நுட்பக் கண்​காட்​சியை பார்​வை​யிட்​டனர். ஹிட்லர் ஆட்​சி​யின்​போது கொல்​லப்​பட்ட யூதர்​கள் நினை​வாக ஜெருசலேமில் அமைக்கப்பட்டுள்ள ஹோலோகாஸ்ட் நினைவு அருங்​காட்​சி​யகத்​தை பிரதமர் மோடி நேற்று பார்​வை​யிட்​டு, உயி​ரிழந்த யூதர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தி​னார். பிறகு, இஸ்​ரேல் அதிபர் ஐசக் ஹெர்​சாக்கை சந்​தித்​து, இந்​தி​யா​ வரு​மாறு அழைப்பு விடுத்​தார்.

பின்​னர், வர்த்​தகம், பாது​காப்பு உள்ளிட்ட பல்​வேறு துறை​களில் இணைந்து பணி​யாற்​று​வது குறித்து மோடியும், நெதன்யாகுவும் முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னர். நிறைவாக, அவர்களது முன்​னிலை​யில் இந்​தி​யா - இஸ்​ரேல் இடையே 17 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. 10 முக்கிய அறிவிப்பு களும் வெளியிடப்பட்டன.

குறிப்​பாக வேளாண்மை தொழில் நுட்​பங்​கள், செயற்​கைக் ​கோள் தரவு​கள், யுபிஐ பணப் பரி​மாற்​றம் உள்​ளிட்​டவை தொடர்​பாக முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. பிறகு, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறிய​தாவது:

பிரதமர் மோடி: வர்த்​தகம், புதுமை கண்​டு​பிடிப்பு உள்​ளிட்ட துறை​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்​படும். இந்​தி​யா - இஸ்​ரேல் இடையே விரை​வில் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும்.

செயற்கை நுண்​ணறி​வு, குவான்​டம், அரிய​வகை கனிமங்​கள் ஆகிய துறைகளில் இரு நாடு​களும் இணைந்து பணி​யாற்​றும். யுபிஐ பணப் பரி​மாற்ற நடை​முறையை இஸ்​ரேலில் அமல்​படுத்த ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. இரு நாடு​களும் இணைந்து ஆயுதங்​கள் தயாரிக்க, தொழில்​நுட்​பங்​களை பரி​மாற்​றம் செய்ய முடிவு செய்​யப்​பட்டுள்ளது. அணுசக்​தி, விண்​வெளி, வேளாண்மை உள்​ளிட்ட துறை​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்​படும்.

இந்​தி​யா, இஸ்​ரேல் வேளாண்மை புதுமை கண்​டு​பிடிப்பு மையம் உரு​வாக்​கப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் இந்​தி​யா​வின் ஒவ்​வொரு கிராமத்​தின் விவ​சா​யத்​தி​லும் இஸ்​ரேலிய தொழில்​நுட்​பங்​கள் அறி​முகம் செய்​யப்​படும். இந்​தி​யா, மத்​திய கிழக்​கு, ஐரோப்​பிய பொருளா​தார வழித்​தடம் திட்​டம் விரை​வில் முன்​னெடுக்கப்படும். இந்​தி​யா, இஸ்​ரேல், ஐக்​கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நாடு​கள் அடங்​கிய ஐ2,​யு2 கூட்​டமைப்பு வலுப்​படுத்​தப்​படும். காசா அமைதி திட்​டத்​துக்கு இந்​தியா முழு ஆதரவு அளிக்​கும்.

பெஞ்​சமின் நெதன்​யாகு: எனது மனைவி சாராவை முதல்​முறை​யாக டெல் அவிவ் நகரில் உள்ள இந்​திய ஓட்​டலில்தான் சந்​தித்​தேன். இதற்​காக இந்​தி​யா​வுக்கு தனிப்​பட்ட முறை​யில் கடன்​பட்​டிருக்​கிறேன்.

இஸ்​ரேல் - இந்​தியா இடையே ‘ஜி2ஜி‘ கூட்​டங்​களை நடத்த முடிவு செய்​துள்​ளோம். செயற்கை நுண்​ணறி​வு,தகவல் தொழில்​நுட்​பம் உள்​ளிட்ட துறை​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்​படும். இவ்​வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT