ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு தேவை இருந்திருக்கிறது. மனித குல வரலாறு அப்படிப்பட்ட தேவையை உணர்ந்து அதைக் கண்டு பிடித்து, அதைப் பயன்படுத்தி தன் அறிவை வளர்த்துக்கொண்டே வந்திருக்கிறது. மற்ற உயிரினங்களுக்கும் மனிதர் களுக்கும் உள்ள வேறுபாடே இதுதான்.
காடுகளில் வாழ்ந்த காலத்தில் மனிதரின் அடிப்படைத் தேவை உணவு மட்டுமே. சாப்பாட்டைத் தேடிதான் அவர்களின் பயணம் இருந்தது.
சாப்பாட்டைத் தேடிய காலத்தில் மனித இனம் வேட்டையாடுதலை, அதற்குத் தேவையான கருவிகளை, சமைக்கும் முறைகளை, அதற்குத் தேவையான கருவி களைக் கண்டு பிடித்துக் கொண்டே இருந்தது.
பிறகு நாடு, மொழி, சமூகம் என்னும் தேடல்கள் ஏற்பட்டன. அதன் பிறகு மனிதர்களின் தேவைகள் பெருகப் பெருக கண்டு பிடிப்புகளும் வாழ்க்கை முறைகளும் பிறந்து கொண்டே இருக்கின்றன.
அப்படி என்றால் இந்தக் காலத்தில் மனித இனம் எதைத் தேடுகிறது? இது அறிவுக் காலம். அறிவைத் தேடுவதுதான் ஒவ்வொரு நொடியிலும் மனிதன் செய்துகொண்டிருப்பது.
ஆமாம்! இது தகவல்களின் காலம். யாரால் தன் மூளையிலும், கையிலிருக்கும் திறன்பேசியிலும் அதிகத் தகவல்களை வைத்திருக்க முடியுமோ அவர்களே வெற்றியாளர் கள், அறிவாளர்கள்.
பிறகு நாடு, மொழி, சமூகம் என்னும் தேடல்கள் ஏற்பட்டன. அதன் பிறகு மனிதர்களின் தேவை கள் பெருகப் பெருக கண்டு பிடிப்புகளும் வாழ்க்கை முறைகளும் பிறந்து கொண்டே இருக்கின் றன. அப்படி என்றால் இந்தக் காலத்தில் மனித இனம் எதைத் தேடுகிறது? இது அறிவுக் காலம். அறிவைத் தேடுவதுதான் ஒவ்வொரு நொடியிலும் மனிதன் செய்துகொண்டிருப்பது.
ஆமாம்! இது தகவல்களின் காலம். யாரால் தன் மூளையிலும், கையிலிருக்கும் திறன்பேசியிலும் அதிகத் தகவல்களை வைத்திருக்க முடியுமோ அவர்களே வெற்றியாளர் கள், அறிவாளர்கள். அதனால்தான் கணினி, திறன்பேசி போன்றவற்றின் நினைவகங்களின் அளவுகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. வெறும் ‘பைட்ஸ்’ எனும் அளவில் இருந்தவை ‘டெரா பைட்ஸ்’ என்பதையும் தாண்டி வானத்தில் சேமிக்கக்கூடிய அளவுக்கு மாறி இருக்கிறது.
நாமும் அப்படித்தான் அதிக அளவு தகவல்கள் தெரிந்தவர்களாக இருந்தால்தான் தேர்வுகளை நன்றாக, எளிதாக எழுத முடியும். பள்ளியில் ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் பேச வேண்டும் என்றால் என்ன செய்கிறீர்கள்? யாராவது எழுதிக் கொடுப்பார்களா எனப் பார்க்கி றீர்கள். ஊரிலோ அல்லது பள்ளியிலோ ஒருவரைத் தேடுவீர்கள். யார் அவர்? அவர் அதிகம் தகவல்களைத் தெரிந்துவைத் திருப்பவராக இருப்பார்.
நம் பிறப்புப் பழக்கம்: தகவல்களைத் தெரிந்து கொண்டு அறிவாளிகளாக மாறுவது அவ்வளவு ஒன்றும் கடினமானதல்ல. மிகவும் எளிமையானது. அதுவும் மாணவர்களாகிய உங்களுக்கு இன்னும் எளிமையானது. ஏனென் றால் உங்கள் ஒவ்வொரு நாளும் அதற்காகவே பிறக்கிறது. வாசிப்பது. அதுவும் மகிழ்ச்சியோடு வாசிப்பது.
கொஞ்சம் யோசித்தால் தெரியும் நீங்கள் பள்ளிக்குப் போகும் வயதை அடைவதற்கு முன் குழந்தையாகத் தவழ்ந்து நடந்து கொண்டிருந்த காலத்தில் புத்தகங் களைக் கண்டவுடன் அதைப் புரட்டி பக்கங்களைப் பார்த்திருப்பீர்கள், இல்லை கிழித்திருப்பீர்கள். ஆக வாசிப்பு என்பது நம் பிறப்புப் பழக்கம். இடையில் பல பழக்கங்கள் ஏற்பட்டதால் வாசிப்பு என்னும் நற்பழக்கம் நம்மிடையே குறைந்துவிட்டது.
ஆளுமை வளர: வாசிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால் நீங்கள்தான் தற்காலத்திற்குத் தேவையான சொத்து. தகவல்கள் உங்களிடம் சேரச் சேர உங்கள் ஆளுமை வளரும். உடலில் ஒரு நிமிர்வு இருக்கும். கண்களில் ஒளி கூடும்.
பேச்சில் அழகு மிளிரும். செயலில் கம்பீரம் இருக்கும். எல்லோரும் உங்களைக் கவனிப்பார்கள். உங்களிடம் பேச விரும்புவார்கள். உங்களுக்குத் தெரிந்ததை அறிந்து கொள்ள விழைவார்கள். வாழ்க்கையில் மிகப்பெரும் வெற்றிகளைப் பெற்றவர் களைப் பாருங்கள், அவர்கள் அதிகமாக வாசித்திருப்பார்கள்.
எதை வாசிப்பது? - “இப்ப பாடப்புத்தகங்கள படிக்கிறதுக்கே நேரம் போதல. இதுல போன்வேற பாக்கணும்” என்றுதானே முணு முணுக்கிறீர்கள். பாடப்புத்தகத்தைத் தாண்டி இன்னும் அதிகமாக நீங்கள் படிக்க வேண்டி இருக்கிறது. வாசிப்பது ஒரு பயிற்சிதான். உலகில் குறிப்பிட்ட நாள்களுக்குத் தொடர்ந்து செய்யும் வேலை, அன்றாட வேலையாக மாறிவிடும்.
பல் துலக்குவதுபோல. முதலில் பல் துலக்கிச் சாப்பிடுவதற்கு அழுத நீங்கள், இப்போது பல் துலக்காமல் இருப்பதில்லை. அதுபோலத்தான் வாசிப்பதும். அதற்காகத்தான் உங்கள் பள்ளியில் சிறிய சிறிய புத்தகங்கள் நூலகத்தில் இருக்கின்றன.
சிறிது சிறிதாக வாசியுங்கள். வாசிக்க வாசிக்க உலகம் உங்கள் கைகளில். ‘கடலும் கிழவனும்’ எனும் உலகப் புகழ்பெற்ற நாவலை எழுதிய எர்னஸ்ட் ஹெமிங்வே “புத்தகத்தைப் போன்ற நேர்மையான நண்பன் வேறு யாரும் இல்லை” என்கிறார்.
- கட்டுரையாளர்: யாழனயாழன் ஆதி, எழுத்தாளர் மற்றும் ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, நாச்சார்குப்பம், திருப்பத்தூர்; yazhanaathi@gmail.com