Didier Marti
சுற்றுலா

லடாக் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 121% அதிகரிப்பு

செய்திப்பிரிவு

லே: லடாக் யூனியன் பிரதேசத்தில் பனிபடர்ந்த மலைச் சிகரங்களும், அழகிய பள்ளத்தாக்குகளும் அமைந்துள்ளன. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா தலைமையிலான லடாக் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணமாக, கடந்த 2025 மே மாதத்தில் 32,927 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 2026 மே மாதத்தில் 72,834 ஆக உயர்ந்து 121.20 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் (ஜனவரி - மே) மொத்தம் ஒரு லட்சத்து 17,546 சுற்றுலாப் பயணிகள் லடாக்குக்கு வருகை தந்துள்ளனர்.

இது 2025ம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடும்போது (81,827 பயணிகள்) 44 சதவீத வளர்ச்சியாகும். மேலும், 2024ம் ஆண்டின் இதே காலகட்டத் தோடு (51,520 பயணிகள்) ஒப்பிடும் போது இது 128 சதவீதம் என்ற பிரம்மாண்ட வளர்ச்சியை எட்டியுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT