ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள். படம்: ஆர்.டி.சிவசங்கர்
ஊட்டி: தீபாவளி விடுமுறையை முன்னிட்டு, ஊட்டியில் கடந்த 3 தினங்களாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்றும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குழுங்கும் மலர்களை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள், ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட்டு புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் எடுத்து மகிழ்ந்தனர்.
நிலச்சரிவு சீரமைப்பு பணி காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர் வழித்தடம் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி மார்க்கமாக சென்றதால், அவ்வழித்தடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.