ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று குவிந்த சுற்றுலா பயணிகள். | படம்: ஆர்.டி.சிவசங்கர் |

 
சுற்றுலா

ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

செய்திப்பிரிவு

ஊட்டி: மே தினம் மற்​றும் தொடர் விடு​முறை காரணமாக ஊட்டியில் ஏராள​மானோர் குவிந்​தனர். ஞாயிற்​றுக்​கிழமை​யான நேற்று அரசு தாவர​வியல் பூங்​கா, படகு இல்​லம் மற்​றும் ரோஜா பூங்​கா​வில் மக்​கள் கூட்​டம் அலை மோதி​யது.

இதனால் பூங்​காக்​களில் நுழைவு சீட்டு வாங்க சுற்​றுலா பயணி​கள் நீண்ட நேரம் காத்​திருக்க வேண்​டிய நிலை ஏற்​பட்​டது. மேலும், ஊட்​டி​யில் அனைத்து ஹோட்​டல்​கள் மற்றும் தங்​கும் விடு​தி​கள் நிரம்பி வழிகின்​றன.

அறை​களின் கட்​ட​ணம் பல மடங்கு உயர்த்​தப்​பட்ட போதி​லும், அனைத்து விடு​தி​களும் முன்​ப​திவு செய்​யப்​பட்​டு, இடம் கிடைக்​காத நிலை ஏற்​பட்​டு உள்​ளது.

சமவெளிப் பகு​தி​களில் இருந்து சுற்​றுலா பயணி​களின் வாக​னங்​கள் அதி​கம் வரு​வ​தால், போக்​கு​வரத்து பாதிப்பு ஏற்​ப​டா​மல் இருக்​கும் வகை​யில் ஊட்டி நகரில் போக்​கு​வரத்​தில் மாற்​றம் செய்​யப்​பட்​டிருந்​தது.

கேரளம், கர்​நாடகா உள்​ளிட்ட வெளி மாநில சுற்​றுலா வாக​னங்​கள், நீதி​மன்ற உத்​தர​வுப்படி மசினகுடி - கல்​லட்டி வழி​யாக ஊட்டி செல்​வதற்​கு, மாவட்ட நிர்​வாகம் தடை விதித்​துள்​ள​தால், சுற்​றுலா வாக​னங்​கள் கூடலூர் வழி​யாகச் செல்​கின்றன.

இதனால், கூடலூர் நகரில் போக்​கு​வரத்து நெரிசல் அதி​கரித்​துள்​ளது. உள்ளூர் வாக​னங்​களை இயக்க நீண்ட நேரம் காத்​திருக்க வேண்டி இருப்​ப​தால் ஓட்​டுநர்​கள், பயணி​கள் அதிருப்தி அடைந்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT