கொடைக்கானலில் குளிர் அதிகரித்து வருவதால் பனி படர்ந்து காணப்படும் செடிகள்.

 
சுற்றுலா

கொடைக்கானலில் கடுங்குளிரால் மக்கள் அவதி

செய்திப்பிரிவு

பழநி: கொடைக்​கானலில் அதி​காலை மற்​றும் இரவு நேரங்​களில் கடுங்​குளிர் வாட்​டுவ​தால் பொது​மக்​கள் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர்.

கொடைக்​கானல் மலைப் பகுதி​யில் கடந்த சில நாட்​களாக மழைப் பொழிவு குறைந்​துள்​ளது. பகலில் வெயி​லின் தாக்​கம் குறைந்து, காற்​றில் ஈரப்​ப​தம் அதி​கரித்து நாள் முழு​வதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நில​வு​கிறது. பகல் 12 மணிக்கு மேல் சாலையே தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்​டம் காணப்​படு​கிறது.

அதி​காலை மற்​றும் இரவு நேரங்​களில் கடுமையான குளிர் நில​வு​கிறது. குளி​ரின் தாக்​கம் அதி​கரித்​துள்​ள​தால் பொது​மக்​கள் கடும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். வழக்​க​மாக டிசம்​பர் முதல் பிப்​ரவரி மாதம் வரை உறைபனி காலமாக இருக்​கும். நடப்​பாண்​டில் மழைப் பொழிவு காரண​மாக, முன்​கூட்​டியே உறைபனி காலம் தொடங்​கிடும் வகை​யில் குளிர் வாட்டி வரு​கிறது. இத​னால் அதி​காலை நேரங்​களில் செடி, கொடிகள், புல்​வெளி​களில் பனி படர்ந்து காணப்​படு​கிறது.

பகலில் அதி​கபட்​ச​மாக 16 டிகிரி செல்​சி​யஸ், இர​வில் 14 டிகிரி செல்​சி​யஸ் வெப்​பநிலை நிலவி வரு​கிறது. தீபாவளி பண்​டிகை நெருங்​கு​வ​தால் கொடைக்​கானலில் தற்​போது நில​வும் சூழலை ரசிப்​ப​தற்கு சுற்​றுலா பயணிகள் வருகை குறைவாகவே உள்​ளது. வழக்​க​மான வார விடு​முறையை காட்​டிலும் நேற்று சுற்​றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்​பட்​டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT