ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்காக மலர் செடிகள் நடவு பணியை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தொடங்கி வைத்தார்.

 
சுற்றுலா

ஊட்டி 128-வது மலர் கண்காட்சிக்காக 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு பணி

செய்திப்பிரிவு

ஊட்டி: ஊட்டி அரசு தாவர​வியல் பூங்​கா​வில் நடை​பெற உள்ள 128-வது மலர் கண்​காட்​சிக்​காக 10 லட்​சம் மலர் நாற்​றுகள் நடவு செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

நீல​கிரி மாவட்​டம் ஊட்​டி, அரசு தாவர​வியல் பூங்​கா​வில் வரும் மே மாதம் நடை​பெற இருக்​கும் 128-வது மலர்​ கண்​காட்​சி​யை முன்​னிட்​டு பூங்​கா​வின்​ பல்​வேறு பகு​தி​களில்​ மலர்​ பாத்​திகள்​ அமைத்​து, பல வண்ண மலர்ச்​ செடிகள்​ நடவு செய்யப்​படு​கின்​றன.

          

இன்கா மேரி​கொல்​டு, பிரன்ச்​ மேரி​கோல்​டு, லில்​லி​யம்​ஸ்​, டேலி​யா போன்​ற மலர்​ நாற்​றுகள்​ நடும்​ பணி​யை தோட்​டக்​​கலைத் ​துறை இணை இயக்​குநர் நவநீதா முன்​னிலை​யில், நீல​கிரி மாவட்ட ஆட்​சி​யர் லட்​சுமி பவ்யா நேற்று தொடங்கி வைத்​தார்.

கடந்த ஆண்டு 2025-ல் 7.5 லட்​சம் மலர் செடிகள் நடவு செய்​யப்​பட்​டன. இவ்​வாண்டு சிறப்பு அம்​ச​மாக பொது​மக்​கள் மற்​றும் சுற்​றுலாப் பயணி​களை கவரும் வகை​யில் ஜெரேனி​யம், சைக்​லமன், பால்​சம் மற்​றும் பல புதிய ரக ஆர்​னமெண்​டல் கேல், ஓரியண்​டல் லில்​லி, ஆசி​யாடிக் லில்​லி, டேலியா மற்​றும் பிகோனி​யா, கேன்​டீடப்ட், பிரன்ச் மேரி​கோல்​டு, பேன்​சி, பெட்​டுனி​யா, பிளாக்​ஸ், ஜினி​யா, ஸ்டாக், வெர்​பி​னா, சன்​பிளவர், சிலோ​சி​யா, ஆன்​டிரைனம், டயான்​தஸ், ஆஸ்​டர், ஜெர்​ப​ரா, க்ரை​சாந்​தி​மம், டெல்​பினி​யம், சால்​வி​யா, ஆந்​தூரி​யம் போன்ற 275 வகை​யான விதைகள் மற்​றும் செடிகள் உள்ளன.

ஜப்​பான், அமெரிக்​கா, ஜெர்​மனி, நெதர்​லாந்து ஆகிய நாடு​களில் இருந்​தும், இந்​தி​யா​வின் பல்​வேறு மாநிலங்​களில் இருந்​தும் பெறப்​பட்டு மலர் செடிகள் உற்​பத்தி செய்​யப்​பட்டு பூங்​கா​வில் பல்​வேறு பகு​தி​களில் 10 லட்​சம் மலர் நாற்​றுகள் நடவு செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

நடவு செய்​யப்​படும் மலர் நாற்​றுகளுக்கு பனி​யின் தாக்​கம் ஏற்​ப​டாத வண்​ணம் கோத்​தகிரி மிலார் செடிகளை கொண்டு பாது​காப்பு செய்​யப்​படும். மேலும், எதிர்​வரும் மலர் கண்​காட்​சி​யையொட்டி மலர்க்​காட்சி மாடம் மற்​றும் கண்​ணாடி மாளி​கை​யில் 50,000 வண்ண மலர்த் தொட்​டிச் செடிகள் வைக்கப்படும்.

இந்த ஆண்டு 25 லட்​சம் சுற்​றுலா பயணி​கள் வருகை தரு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்​நிகழ்​வில், துணை இயக்​குநர் (பொ) பபீ​தா, உதவி இயக்​குநர் ஜெயந்​தி, பைசல், தோட்​டக்​கலை துறை அலு​வலர்​கள், பணி​யாளர்​கள் உட்பட பலர் கலந்து கொண்​டனர்.

SCROLL FOR NEXT