சுற்றுலா

நீலகிரி மலை ரயில்​ கட்டணம்​ இன்று முதல்​ 5% உயர்வு

செய்திப்பிரிவு

ஊட்​டி: நீலகிரி மலை ரயில் கட்​ட​ணம் இன்று (பிப். 21) முதல் 5 சதவீதம் உயர்த்​தப்​படு​வ​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​துள்ளனர். யுனெஸ்​கோ’ அங்​கீ​காரம் பெற்ற நீலகிரி மலை ரயி​லில் பயணம் செய்ய, உள்​நாடு மட்​டுமின்றி வெளி​நாட்டு சுற்​றுலாப் பயணி​களும் அதிக ஆர்​வம் காட்​டு​கின்​றனர்.

கடந்த ஆண்டு சுமார் 25 லட்​சம் பேர் நீலகிரி மாவட்​டத்​துக்கு வந்​துள்​ளனர். நீலகிரிக்கு வரும் சுற்​றுலாப் பயணி​கள் மலை ரயி​லில் பயணிக்க பெரிதும் ஆர்​வம் காட்​டு​கின்​றனர். நீலகிரி மலை ரயி​லில் கோடை காலத்​தில் பயணிக்க முன்​ப​திவு முழு​வதும் முடிந்த நிலை​யில், பலருக்கு இடம் கிடைக்​காமல் ஏமாற்​றமடைந்​துள்​ளனர்.

          

நீலகிரி மலை ரயில் நஷ்டத்​தில் இயங்​கிய​தால் 2020-ல் ரயில் கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டது. அதன்​படி, மேட்​டுப்​பாளை​யம் முதல் ஊட்டி வரை முதல் வகுப்பு கட்​ட​ணம் ரூ.470, இரண்​டாம் வகுப்பு (முன்​ப​திவு) ரூ.145, இரண்​டாம் வகுப்பு (முன்​ப​திவற்​றது) ரூ.75 ஆக உயர்த்​தப்​பட்​டது.

அதே​போல, மேட்​டுப்​பாளை​யத்​திலிருந்து குன்​னூருக்கு முதல் வகுப்பு கட்​ட​ணம் ரூ.365-ஆக நிர்​ண​யிக்​கப்​பட்​டது. இரண்​டாம் வகுப்பு (முன்​ப​திவு) கட்​ட​ணம் ரூ.100, இரண்​டாம் வகுப்பு (முன்​ப​திவற்​றது) ரூ.50-ஆக நிர்​ண​யிக்​கப்​பட்டு இது​வரை வசூலிக்​கப்​பட்டு வந்​தது.

இந்​நிலை​யில், நீலகிரி மலை ரயி​லில் அடிப்​படைக் கட்​ட​ணம் பிப்​ர​வரி 21-ம் தேதி (இன்​று) முதல் 5 சதவீதம் அதி​கரிக்​கப்​படும் என ரயில்வே நிர்​வாகம் அறி​வித்​துள்​ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட மக்​கள் தொடர்பு அதி​காரி ஜி. மரியா மைக்​கேல் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: பிரபல​மான நீலகிரி மலை ரயில் சேவை 1899-ல் தொடங்​கப்​பட்​டது.

2005-ல் யுனெஸ்​கோ​வால் இது உலகப் பாரம்​பரிய தளமாக சேர்க்​கப்​பட்​டது. தற்​போது, நீலகிரி மலை ரயில் பாதை​யில் 3 வகை​யான ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. ஒரு நாளைக்கு 8 பயணங்​கள், கோடை மற்​றும் பிற விடு​முறை நாட்​கள், வார இறுதி நாட்​கள், திரு​விழாக்​களின் போது சிறப்பு ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

நீலகிரி மலை ரயில் பிரி​வில் சரக்கு கட்​ட​ணம் கணிச​மாக அதி​கரித்​துள்​ளது. மேட்​டுப்​பாளை​யம் - குன்​னூர் இடையே சரக்கு கட்​ட​ணம் 204% அதி​கரித் ​துள்​ளது. கூடு​தலாக, பிற செயல்​பாடு​கள், பராமரிப்பு செல​வு​கள் மற்​றும் ஊழியர்​களின் செல​வு​களும் கணிச​மாக அதி​கரித்​துள்​ளன. இருப்​பினும், வழக்​க​மான ரயில்​களுக்​கான டிக்​கெட் கட்​ட​ணம் கடந்த 2020-ம் ஆண்டு முதல் மாற்​றியமைக்​கப்​பட​வில்​லை.

இதனால் ஏற்​படும் வரு​வாய் இழப்பை நிர்​வகிக்க பிப். 21 முதல் (இன்​று) வழக்​க​மான ரயில்​களின் அடிப்​படைக் கட்​ட​ணம் 5 சதவீதம் அதி​கரிக்​கப்​படு​கிறது. முன்​ப​திவுக் கட்​ட​ணங்​கள், கூடு​தல் கட்​ட​ணங்​கள் போன்​றவற்​றில் எந்த மாற்​ற​மும் இருக்​காது. பொருந்​தக்​கூடிய வகை​யில் ஜிஎஸ்டி தொடர்ந்து வசூலிக்​கப்​படும்.

மற்ற அனைத்து விதி​முறை​களும் நிபந்​தனை​களும் மாறாமல் இருக்​கும். இந்த பாதை​யில் இயக்​கப்​படும் சிறப்பு ரயில்​கள் மற்​றும் சார்​ட்​டர் சிறப்பு ரயில்​களின் டிக்​கெட் கட்​ட​ணத்​தில் எந்த மாற்​ற​மும் இருக்​​காது. இவ்​​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT