சென்னை: சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி 18 புரோ போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
கடந்த 2014 வாக்கில் இந்திய சந்தையில் நுழைந்தது சீன நிறுவனமான சியோமி. பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மிகவும் பிரபலம்.
படிப்படியாக பல்வேறு டிஜிட்டல் சாதனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்யத் தொடங்கியது. தற்போது சியோமி 18 புரோ போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதோடு சியோமி 18 புரோ மேக்ஸ் போனும் வெளிவந்துள்ளது. இந்தியாவில் இந்த போன் எப்போது அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு போன்களும் இந்தியாவில் பிரீமியம் ரக போன்களாக வெளிவந்துள்ளது. இதன் பின்புறம் உள்ள செகண்டரி டிஸ்பிளே ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கிறது.
>> டிஸ்பிளே: 6.4 இன்ச் AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். போனின் பின்புறம் 2.7 இன்ச் கொண்ட செகண்டரி டிஸ்பிளே உள்ளது. இது நோட்டிபிகேஷன் உள்ளிட்டவற்றை அறிய உதவும்.
>> சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 சிப்செட்
>> கேமரா: 200 + 200 + 50 என மூன்று கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது. 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா.
>> பேட்டரி: 6,000mAh பேட்டரி. 90 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட். 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் இதில் உள்ளது.
>> ரேம்: 12 ஜிபி, 16 ஜிபி ரேமை இந்த போன் கொண்டுள்ளது
>> ஸ்டோரேஜ்: 256 ஜிபி, 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி இதில் உள்ளது.
>> நான்கு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.