தொழில்நுட்பம்

Vivo V70 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி70 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் விவோ வி70 எலைட் மாடல் போனும் அறிமுகமாகி உள்ளது.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

          

அந்த வகையில் இப்போது இந்தியாவில் வி70 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘வி’ வரிசை போன்களுக்கு இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. பிரீமியம் செக்மென்ட் விலையில் போனை பயன்படுத்த விரும்பும் பயனர்களை மனதில் வைத்து இந்த போனை விவோ வடிவமைத்துள்ளது. 4 இயங்குதள அப்டேட் உத்தரவாதம் இந்த போனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.

விவோ வி70 ஸ்மார்ட்போன்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.59 இன்ச் OLED டிஸ்பிளே

  • ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

  • ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 4 சிப்செட்

  • 8 / 12 ஜிபி ரேம்

  • 256 ஜிபி ஸ்டோரேஜ்

  • 50 + 8 + 50 மெகாபிக்சல் என மூன்று போனின் பின்பக்கம் இடம்பெற்றுள்ளது

  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

  • 6,500 mAh பேட்டரி

  • 90 வாட்ஸ் சார்ஜர் இந்த போனுடன் கிடைக்கிறது

  • 5ஜி நெட்வொர்க்

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • இந்த போனின் விலை ரூ.45,999 முதல் தொடங்குகிறது

SCROLL FOR NEXT