தொழில்நுட்பம்

Vivo V70 FE ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி70 FE ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

          

அந்த வகையில் இப்போது இந்தியாவில் விவோ வி70 FE ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் விவோ வி70 வரிசையில் ஒன்றாக வெளிவந்துள்ளது. இந்த போனின் கேமரா, பேட்டரி உள்ளிட்டவை ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

விவோ வி70 FE ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.83 இன்ச் AMOLED டிஸ்பிளே

  • மீடியாடெக் டிரான்சிட்டி 7360 டர்போ சிப்செட்

  • ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

  • 8, 12ஜிபி ரேம்

  • 128, 256ஜிபி ஸ்டோரேஜ்

  • 200 + 8 மெகாபிக்சல் என இரண்டு கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது

  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

  • 7,000mAh பேட்டரி

  • 90 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

  • ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்

  • 5ஜி நெட்வொர்க்

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

  • இந்த போனின் விலை ரூ.37,999 முதல் தொடங்குகிறது

SCROLL FOR NEXT