சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி5 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இப்போது இந்தியாவில் டி5 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘T’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ல் டி1 மாடல் அறிமுகமானது. அதைத்தொடர்ந்து டி2, டி3 மற்றும் டி4 மாடல் போன்கள் அறிமுகமாகின. கடந்த மார்ச் மாதம் டி5எக்ஸ் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமானது. இப்போது டி5 புரோ வெளிவந்துள்ளது. வரும் 21-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை ஆரம்பமாகிறது.
விவோ டி5 புரோ சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரேஷன் 4 சிப்செட்
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
6.83 இன்ச் AMOLED டிஸ்பிளே
8, 12ஜிபி ரேம்
128, 256ஜிபி ஸ்டோரேஜ்
32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
50 + 2 மெகாபிக்சல் என இரண்டு கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
9020mAh பேட்டரி
80 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
5ஜி நெட்வொர்க்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
இந்த போனின் விலை ரூ.29,999 முதல் தொடங்குகிறது