சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி Z ஃபோல்ட் 8 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது.
தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.
இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி Z ஃபோல்ட் 8 போன் வெளிவந்துள்ளது. இதோடு கேலக்சி Z ஃபோல்ட் 8 அல்ட்ரா மற்றும் கேலக்சி Z Flip 8 மாடல் போன்களும் வெளிவந்துள்ளன. இதில் அல்ட்ரா வேரியண்ட் மாடல் போனை முதல் முறையாக ஃபோல்ட் வகை போனில் அறிமுகம் செய்துள்ளது சாம்சங்.
சாம்சங் கேலக்சி Z ஃபோல்ட் 8 - சிறப்பு அம்சங்கள்
>> 7.6 இன்ச் மெயின் டிஸ்பிளே
>> 5.5 இன்ச் வெளிப்புற டிஸ்பிளே
>> ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜெனரேஷன் 5 சிப்செட்
>> ஆண்ட்ராய்டு 17 இயங்குதளம்
>> 12, 16 ஜிபி ரேம்
>> 256, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ்
>> 10 + 10 மெகாபிக்சல் என இரண்டு கேமரா போனின் முன்பக்கம் உள்ளது
>> 50 + 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
>> 4,800mAh பேட்டரி
>> மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
>> 45 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
>> வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்
>> ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
>> 5ஜி நெட்வொர்க்
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> இந்த போனின் விலை ரூ.1,79,999 முதல் தொடங்குகிறது