சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி எம்47 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி.
தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.
இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘எம்’ வரிசையில் கேலக்சி எம்47 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் விற்பனை வரும் ஜூலை 4-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த போனில் ஆறு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்சி எம்47 ஸ்மார்ட்போன்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>> 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே
>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
>> ஸ்னாப்டிராகன் 6 ஜெனரேஷன் 3 சிப்செட்
>> 50 + 5 + 2 மெகாபிக்சல் என மூன்று கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
>> 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
>> 6, 8 ஜிபி ரேம்
>> 128, 256 ஜிபி ஸ்டோரேஜ்
>> 6,000 mAh பேட்டரி
>> 45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
>> 5ஜி நெட்வொர்க்
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> இந்த போனின் விலை ரூ.22,999 முதல் ஆரம்பமாகிறது