சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி F70e ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.
இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் அதன் ‘F’ போன் வரிசையில் புது வரவாக கேலக்சி F70e ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் போன்களை எதிர்பார்க்கும் பயனர்களை கருத்தில் கொண்டு இந்த போனை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் இந்த போன் சர்வதேச சந்தையில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்சி F70e 5ஜி ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
6.7 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட்
50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. அதனுடன் 2 மெகாபிக்சல் கொண்ட கேமராவும் இடம்பெற்றுள்ளது
8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
4ஜிபி / 6ஜிபி ரேம்
128ஜிபி ஸ்டோரேஜ்
6,000 mAh பேட்டரி
25 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
5ஜி நெட்வொர்க்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
இந்த போனின் விலை ரூ.12,999 முதல் தொடங்குகிறது