சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் ரெட்மி ஏ7 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பதை விரிவாக பார்ப்போம்.
சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த வகையில் தற்போது ரெட்மி ஏ7 புரோ ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் என்ட்ரி லெவல் செக்மென்ட் பிரிவாக வெளிவந்துள்ளது. வரும் 23-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை தொடங்குகிறது. கருப்பு மற்றும் நீலம் என இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. இதோடு ஏ7 புரோ என்ற மாடலையும் ரெட்மி அறிமுகம் செய்துள்ளது.
ரெட்மி ஏ7 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
6.88 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
Unisoc T7250 சிப்செட்
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
3 ஜிபி ரேம்
64 ஜிபி ஸ்டோரேஜ்
8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
5200mAh பேட்டரி
15 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
4ஜி நெட்வொர்க்
ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
இந்த போனின் விலை ரூ.10,999 முதல் தொடங்குகிறது