தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் இந்தியாவில் Redmi A7 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி ஏ7 புரோ போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.

          

அந்த வகையில் தற்போது ரெட்மி ஏ7 புரோ ஸ்மார்ட்போனை அறிமுகமாகி உள்ளது. ‘ஏ’ சீரிஸில் ரெட்மி வெளியிட்டுள்ள முதல் புரோ மாடல் போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ளது இந்த போன். இதில் ‘வெட் டச்’ சப்போர்ட் உள்ளது. பட்ஜெட் விலையில் போன் வாங்க விரும்பும் பயனர்களுக்கு இது சரியான தேர்வாக இருக்கும் என டெக் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

ரெட்மி ஏ7 புரோ ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.9 இன்ச் எல்சிடி டிஸ்பிளே

  • Unisoc T8300 சிப்செட்

  • ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

  • 4 ஜிபி ரேம்

  • 64, 128 ஜிபி ஸ்டோரேஜ்

  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா

  • 6300mAh பேட்டரி

  • 15 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

  • ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • 5ஜி நெட்வொர்க்

  • இந்த போனின் விலை ரூ.12,499 முதல் தொடங்குகிறது

  • ஏப்.15 முதல் இந்த போனின் விற்பனை ஆரம்பமாகிறது

SCROLL FOR NEXT