சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி 17சி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. சமயங்களில் ப்ரீமியம் போன்களையும் அறிமுகம் செய்கிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை இந்நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த வகையில் தற்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி 17சி போன் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான ரெட்மி 15சி போனின் வரிசையில், அதன் மேம்பட்ட மாடலாக 17சி உள்ளது. மிட் செக்மென்ட் பிரிவில் இந்த போன் அறிமுகமாகி உள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. வரும் 7-ம் தேதி இந்த போனின் விற்பனை தொடங்க உள்ளது.
ரெட்மி 17சி சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>> 6.9 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
>> மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட்
>> 4, 6 ஜிபி ரேம்
>> 64, 128 ஜிபி ஸ்டோரேஜ்
>> 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
>> பின்பக்கத்தில் இரண்டு கேமரா உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
>> 6,000mAh பேட்டரி
>> 33 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
>> 5ஜி நெட்வொர்க்
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> இந்த போனின் விலை ரூ.20,999 முதல் தொடங்குகிறது