Poco M8 ஸ்மார்ட்போன்

 
தொழில்நுட்பம்

Poco M8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ எம்8 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வரும் போக்கோ, பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் தற்போது போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது எம் சீரிஸ் வரிசையில் வந்துள்ள புதிய மாடல் போக்கோ போனாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் டிஸ்பிளே, மெல்லிய டிசைன் மற்றும் அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலான மென்பொருள் உள்ளிட்டவை ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

போக்கோ எம்8 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே

  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரேஷன் 3 சிப்செட்

  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்

  • நான்கு ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட்

  • ஆறு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்

  • பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா

  • 20 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

  • 5,520mAh பேட்டரி

  • 45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

  • 5ஜி நெட்வொர்க்

  • 6 / 8 ஜிபி ரேம்

  • 128 / 256 ஜிபி ஸ்டோரேஜ்

  • இந்த போனின் விலை ரூ.18,999 முதல் தொடங்குகிறது

SCROLL FOR NEXT