Redmi Note 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

Redmi Note 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

Published on

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அண்மையில் ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமானது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம்தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.

அந்த வகையில் தற்போது ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ளது இந்த போன். இரண்டு விதமான ஸ்டோரேஜ் வேரியன்ட்களில் இதை ரெட்மி அறிமுகம் செய்துள்ளது. கடந்த டிசம்பரில் ரெட்மி 15 சீரிஸில் ரெட்மி 15சி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 15 சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே

  • ஸ்னாப்டிராகன் 6 ஜெனரேஷன் 3 சிப்செட்

  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்

  • 108 + 8 மெகாபிக்சல் என இரண்டு கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது

  • 20 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

  • 8ஜிபி ரேம்

  • 128 / 256ஜிபி ஸ்டோரேஜ்

  • 5,520 mAh பேட்டரி

  • 45 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

  • ரிவர்ஸ் சார்ஜிங் அம்சமும் உள்ளது

  • இந்த போனுடன் சார்ஜர் கிடைக்கிறது

  • 5ஜி நெட்வொர்க்

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • இந்த போனின் விலை ரூ.19,999 முதல் தொடங்குகிறது

Redmi Note 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Realme 16 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in