சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ சி85எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வரும் போக்கோ, பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் தற்போது போக்கோ சி85எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது சி சீரிஸ் வரிசையில் வந்துள்ள புதிய மாடல் போக்கோ போனாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போன் இரண்டு வித ஸ்டோரேஜ் வேரியண்டில் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த போன் பட்ஜெட் விலையில் 5ஜி போனை எதிர்பார்ப்பவர்களுக்கு சிறந்த சாய்ஸாக அமைய வாய்ப்புள்ளது.
போக்கோ சி85எக்ஸ் 5ஜி சிறப்பு அம்சங்கள்:
6.9 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
Unisoc T8300 சிப்செட்
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
பின்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது
8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
4ஜிபி ரேம்
64 / 128ஜிபி ஸ்டோரேஜ்
6300mAh பேட்டரி
15 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
5ஜி நெட்வொர்க்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
இரண்டு சிம் கார்டு + மெமரி கார்டு பொருத்தும் ட்ரிபிள் ஸ்லாட்
இந்த போனின் விலை ரூ.10,999 முதல் தொடங்குகிறது