தொழில்நுட்பம்

சீனாவின் Poco C81x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

பட்ஜெட் விலையில் விற்பனை

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ சி81எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வரும் போக்கோ, பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் தற்போது போக்கோ சி81 சீரிஸ் ஸ்மார்ட்போன் வகையில் சி81, சி81எக்ஸ் என இரண்டு மாடல் போன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் இந்த போன்கள் வெளிவந்துள்ளன. இந்த இரண்டு போன்களின் பேட்டரி, ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம் மற்றும் டிஸ்பிளே உள்ளிட்டவை டெக் வல்லுநர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. இருப்பினும் இந்த இரண்டு போன்களும் 4ஜி நெட்வொர்க்கில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

போக்கோ சி81எக்ஸ் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.88 இன்ச் டிஸ்பிளே

  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்

  • Unisoc T7250 சிப்செட்

  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

  • 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா

  • 3ஜிபி ரேம்

  • 64ஜிபி ஸ்டோரேஜ்

  • 5,200mAh பேட்டரி

  • 15 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு

  • ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்

  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

  • 4ஜி நெட்வொர்க்

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • ஃபிங்கர் பிரிண்ட் ரீடர்

  • இந்த போனின் விலை ரூ.9,999

SCROLL FOR NEXT