சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ கே14 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ‘K’ சீரிஸ் போன்களின் வரிசையில் ‘கே14’ வெளிவந்துள்ளது. மிட் செக்மென்ட் விலையில் இந்த போன் வெளிவந்துள்ளது. வாட்டர் ரெஸிஸ்ட்னஸ், சிறந்த பேட்டரி லைஃப் என இந்த போன் பயனர்களின் கவனத்தை ஈர்க்கிறது. ஒப்போ நிறுவனம் ஏ6எஸ் என்ற ஸ்மார்ட்போனையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஒப்போ கே14 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
6.75 இன்ச் டிஸ்பிளே
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட்
6ஜிபி, 8ஜிபி ரேம்
128 ஜிபி, 256ஜிபி ஸ்டோரேஜ்
50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
7,000mAh பேட்டரி
45 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு
5ஜி நெட்வொர்க்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
இதன் விலை ரூ.17,999 முதல் தொடங்குகிறது