

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி5எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இப்போது இந்தியாவில் டி5எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘T’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ல் டி1 மாடல் அறிமுகமானது. அதைத்தொடர்ந்து டி2, டி3 மற்றும் டி4 மாடல் போன்கள் அறிமுகமாகின. இந்த சூழலில் தற்போது டி5எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது.
விவோ டி5எக்ஸ் ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள்
6.76 இன்ச் ஃபுல் ஹெச்டி+ எல்சிடி டிஸ்பிளே
மீடியாடெக் டிரான்சிட்டி 7400 சிப்செட்
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
32 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
ஏஐ சர்ச், ஏஐ கேப்ஷன்ஸ் உள்ளிட்ட அம்சங்கள்
6ஜிபி / 8ஜிபி ரேம்
128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
7,200 mAh பேட்டரி
44 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
இந்த போனுடன் சார்ஜர் வழங்குகிறது விவோ
இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
யுஎஸ்பி டைப்-சி போர்ட் 2.0
5ஜி நெட்வொர்க்
ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
இந்த போனின் விலை ரூ.18,999 முதல் தொடங்குகிறது
மார்ச் 24 முதல் இந்த போனின் விற்பனை தொடங்குகிறது