சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ எஃப்35 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ஒப்போ எஃப்35 புரோ ஸ்மார்ட்போனும் வெளிவந்துள்ளது.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ‘F’ சீரிஸ் வரிசையில் ‘எஃப்35’ போன் வெளிவந்துள்ளது. உலக அளவில் ஒப்போவின் 'எஃப்' சீரிஸ் போன்களுக்கு சிறந்த வரவேற்பு உள்ளது. தற்போது எஃப்35 மற்றும் எஃப்35 புரோ மாடல் போன்களை ஒப்போ அறிமுகம் செய்துள்ளது.
ஒப்போ எஃப்35 போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>> 6.57 இன்ச் AMOLED டிஸ்பிளே
>> மீடியாடெக் டிமான்சிட்டி 6360 மேக்ஸ் சிப்செட்
>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
>> 6, 8 ஜிபி ரேம்
>> 128 ஜிபி ஸ்டோரேஜ்
>> 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
>> 50 + 2 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
>> 8,000mAh பேட்டரி
>> 80 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
>> ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
>> 5ஜி நெட்வொர்க்
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
>> இதன் விலை ரூ.38,999 முதல் தொடங்குகிறது