தொழில்நுட்பம்

ரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவிடும் ஸ்மார்ட்வாட்ச்: சீனாவின் ஹுவாவே நிறுவனம் அறிமுகம்

செய்திப்பிரிவு

பெய்ஜிங்: சீன நிறு​வன​மான ஹுவாவே ரத்த அழுத்​தத்தை துல்​லிய​மாகக் கணிக்​கும் சிறப்பு ‘கஃப்’ வசதி​யுடன் கூடிய புதிய ஸ்மார்ட்​வாட்சை அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது.

‘ஹு​வாவே வாட்ச் டி3’ எனப் பெயரிடப்​பட்​டுள்ள இந்த கடி​காரத்​தில், ரத்த அழுத்த பரிசோதனைக் கருவி​களில் பயன்​படு​வது போன்ற சிறிய ‘கஃப்’ அதன் வார்​பட்​டை​யிலேயே (ஸ்ட்​ராப்) இணைக்​கப்​பட்​டுள்​ளது. இது மணிக்​கட்​டைச் சுற்றி லேசாகக் காற்​றில் உப்​பி, சிஸ்​டா​லிக் மற்​றும் டயஸ்​டா​லிக் ரத்த அழுத்த அளவு​களைத் துல்​லிய​மாகக் காட்​டு​கிறது. இது தொடர்​பான வீடியோ இணை​யதளங்​களில் வைரலாகி வரு​கிறது.

இதுகுறித்து ஹுவாவே நிறு​வனம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “மருத்​து​வக் கருவி போன்ற தோற்​றம் இல்​லாமல், சாதாரண ஸ்மார்ட்​வாட்ச் போலவே 11.3 மி.மீ. தடிமன், 40 கிராம் எடை​யுடன் இது வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

பிளாக், கோல்டு மற்​றும் மோகா கோல்டு ஆகிய நிறங்​களில் வெளி​யாகி​யுள்ள இந்த ஸ்மார்ட்​வாட்ச், இங்​கிலாந்​தில் 399.99 பவுண்​டு​கள் (ரூ.50,770) விலை​யில் விற்​பனைக்கு வந்​துள்​ளது. இக்​கடி​காரம் ஆண்ட்​ராய்டு மற்​றும் ஆப்​பிள் (ஐஓஎஸ்) ஆகிய இரண்டு இயங்​குதளங்​களி​லும் செயல்​படும் திறன்​ கொண்​டது” என்​று கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT