சென்னை: மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
மோட்டோ நிறுவனத்தின் ‘ஜி’ சீரிஸ் வரிசை போன்கள் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் பிரபலம். இந்த போன் மிட் செக்மென்ட் விலையில் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. கடந்த மாதம் இந்த போன் பிரேசிலில் அறிமுகமானது. ஆனால், இந்தியாவில் இதன் ரேம் உள்ளிட்ட அம்சங்கள் மாற்றத்துடன் அறிமுகமாகி உள்ளது.
மோட்டோ ஜி மேக்ஸ்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>> 6.72 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
>> ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜெனரேஷன் 4 சிப்செட்
>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
>> 6 ஜிபி ரேம்
>> 128 ஜிபி ஸ்டோரேஜ்
>> 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
>> 50 + 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள கேமரா
>> 7,000 mAh பேட்டரி
>> 30 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
>> ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
>> 5ஜி நெட்வொர்க்
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> இந்த போன் மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ளது
>> இதன் விலை ரூ.27,999