சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோரோலா ஜி37 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் மோட்டோ ஜி37 போனும் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
மோட்டோ நிறுவனத்தின் ‘ஜி’ சீரிஸ் மாடல் போன்கள் உலக அளவில் பிரபலமாக அறியப்படுகின்றன. அந்த வகையில் இப்போது மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இது பட்ஜெட் மற்றும் மிட் ரேன்ஜ் செக்மென்ட் பிரிவில் போனை வாங்க விரும்பும் பயனர்களை டார்கெட் செய்து இந்த போனை மோட்டோ வெளியிட்டுளள்து. ரூ.25,000-க்கு குறைவான விலையில் கிடைக்கும் இந்த போனின் பேட்டரி லைஃப், ஸ்மார்ட்போன் ஆர்வலர்களின் கவனத்தை பெற்றுள்ளது. வரும் 25-ம் தேதி முதல் இந்த போன் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்.
மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போன்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
6.7 இன்ச் ஹெச்டி+ எல்சிடி டிஸ்பிளே
மீடியாடெக் டிமான்சிட்டி 6400 சிப்செட்
ஆண்ட்ராய்ட்டு 16 இயங்குதளம்
50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
4, 8 ஜிபி ரேம்
64, 128 ஜிபி ஸ்டோரேஜ்
7,000mAh பேட்டரி
30 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
6 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
5ஜி நெட்வொர்க்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது
இதன் விலை ரூ.15,999 முதல் தொடங்குகிறது