தங்கம் விலை பவுனுக்கு ரூ.960 சரிவு: இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை பவுனுக்கு ரூ.960 சரிவு: இன்றைய விலை நிலவரம் என்ன?
Updated on
1 min read

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சென்னையில் இன்று (மே 20) காலை வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.960 என குறைந்தது. இதேபோல வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.15,000 என சரிந்துள்ளது.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் (மே 13) தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து அன்றைய நாளில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.670 என உயர்ந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

இந்நிலையில், நேற்று தங்கம் விலை உயர்ந்திருந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் கிராமுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,750-க்கும், பவுனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,18,000-க்கும் விற்பனையாகிறது. நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.960 உயர்ந்திருந்த நிலையில் இன்று அப்படியே சரிந்துள்ளது.

24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.1,048 என விலை குறைந்து, ஒரு பவுன் ரூ.1,28,728-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.600 என விலை குறைந்து, ஒரு பவுன் ரூ.98,680-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.285-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,85,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.960 சரிவு: இன்றைய விலை நிலவரம் என்ன?
பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 94.31% பேர் தேர்ச்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in