தொழில்நுட்பம்

மென்​பொருள் உருவாக்கத்தை எளிதாக்கலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 35

சரவணன் பார்த்தசாரதி

மென்​பொருள் உரு​வாக்​கத்​தின்​போது நிரல்​களை எழுது​வது, பிழைகளைக் கண்​டறிந்து சரிசெய்​வது, கோப்​பு​களில் மாற்​றங்​களை மேற்​கொள்​வது போன்ற பணிகள் அதிக நேரத்தை எடுத்​துக்​கொள்​கின்​றன. இது போன்ற பணிகளை எளிதாக்கி, மென்​பொருள் உரு​வாக்​குநர்​களின் சிந்​தனைகளைச் செயல்​படும் நிரல்​களாக மாற்ற உதவும் செய்​யறிவு சார்ந்த நிரலாக்​கத் தளமே ‘Cursor’.

இது நிரல்​களை எழுத உதவும் கரு​வியாக மட்​டுமல்​லாமல், நிரலாக்​கத் திருத்தி (Code Editor), செய்​யறிவு முகவர்​கள் (AI Agents), கிளவுட் சேவை​கள், இன்​னபிற மென்​பொருள் உரு​வாக்​கக் கரு​வி​கள் ஆகிய​வற்றை ஒருங்​கிணைத்து வழங்​கும் தளமாகவும் செயல்​படு​கிறது.

நிரலாக்க முகவர்​கள் (AI Coding Agents)

ஒரு மென்​பொருளில் நமக்​குத் தேவை​யான அம்​சத்தை இயல்​பான மொழி​யில் விளக்​கினால், Cursor-ன் செய்​யறிவு முகவர்​கள் அதற்​கேற்​பத் திட்​ட​மிட்டு, தொடர்​புடைய கோப்​பு​களை ஆராய்ந்து, நிரல்​களை எழுதவும் திருத்​தவும் உதவு​கின்​றன. தேவைப்​படும் இடங்​களில் நிரல்​களை இயக்​கிப்​பார்த்து, பிழைகளைச் சரிசெய்​ய​வும் முடியும்.

கிளவுட் முகவர்​கள் (Cloud Agents)

இதன் கிளவுட் முகவர்​கள் தனித்​தனியான இணை​ய​வழிக் கணி​னிச் சூழல்​களில் செயல்​படு​கின்​றன. இத​னால், ஒரே நேரத்​தில் பல்​வேறு வகை​யான பணிகளை வெவ்​வேறு முகவர்​களுக்கு ஒதுக்க முடியும். இவை நிரல்​களை உரு​வாக்​குதல், சோதித்​தல், திருத்​து​தல் போன்ற பணிகளை மேற்​கொள்​வதுடன், செய்​யப்​பட்ட மாற்​றங்​களை மதிப்​பாய்வு செய்து சோதனை முடிவு​களை​யும் பயனர்​களுக்கு வழங்​கு​கின்​றன.

வேறு​பட்ட மாதி​ரி​களும் ஒருங்​கிணைப்​பும் (Multiple AI Models)

இந்​தத் தளத்​தில் பல முன்​னணி செய்​யறிவு மாதி​ரி​கள் இருப்​ப​தால், தங்​கள் பணிகளுக்​குத் தேவை​யான பொருத்​த​மான மாதி​ரியைப் பயனர்​கள் தேர்ந்​தெடுக்க முடியும். இதன் மூலம், ஒரே செய்​யறிவு மாதி​ரியை மட்​டும் சார்ந்​திருக்​காமல் பல்​வேறு மாதி​ரி​களின் திறன்​களை​யும் சோதித்​துப் பார்க்​கவும் முடி​கிறது. Cursorஐ Terminal கட்​டளைகள் மூலமாகவும் GitHub, Slack போன்ற தளங்​களு​டன் இணைத்​தும் பயன்​படுத்த முடியும்.

தன்​னியக்​கமும் பாது​காப்​பும் (Automation & Security)

புதிய குறியீட்டு மாற்​றங்​களை மதிப்​பாய்வு செய்​தல், பிழைகள் தொடர்​பான தகவல்​களை ஆய்வு செய்​தல், பாது​காப்​புக் குறைபாடுகளைக் கண்​டறிய உதவுதல் போன்ற பணிகளைச் செய்​யறிவு முகவர்​களின் துணை​யுடன் தானியக்​கம் (Auotomate) செய்​ய​லாம். மேலும், தனிமைப்​படுத்​தப்​பட்ட கிளவுட் சூழல்​கள், அணுகல் கட்​டுப்​பாடுகள், நிறு​வன அளவி​லான பாது​காப்பு வசதி​களை​யும் Cursor வழங்​கு​கிறது.

பிற நிரலாக்​கக் கரு​வி​களி​லிருந்து Cursor எவ்​வாறு வேறுபடுகிறது?

வழக்​க​மான நிரலாக்​கத் திருத்​தி​கள் நிரல்​களை எழுது​தல், திருத்து​தல், பிழைகளைக் கண்​டறிதல் போன்ற பணிகளுக்கு உதவு​கின்​றன. அவற்​றில் சில செய்​யறிவு வசதி​களை​யும் தன்​னுள் கொண்​டுள்​ளன. ஆனால் Cursor, நிரலாக்​கத் திருத்​தி​யுடன் செய்​யறிவு முகவர்​களை நேரடி​யாக ஒருங்​கிணைத்து, திட்​டத்​தின் பல கோப்​பு​களை ஆராய்​தல், பணிகளைத் திட்​ட​மிடுதல், மாற்​றங்​களை மேற்​கொள்​ளுதல், சோதித்​தல் போன்ற செயல்​பாடுகளை ஒரே இடத்​தில் வழங்​கு​கிறது.

யாருக்​குப் பயன்​படும்?

மென்​பொருள் பொறி​யாளர்​கள், மாணவர்​கள், ஆராய்ச்​சி​யாளர்​கள், புத்​தாக்க நிறு​வனர்​களுக்கு இந்​தக் கருவி பயனுள்​ள​தாக இருக்​கும்.

மென்​பொருள் உரு​வாக்​கத்​தில் செய்​யறி​வின் பங்​களிப்பு, நிரலாக்​கங்​களைப் பரிந்​துரைப்​பது என்​கிற நிலை​யி​லிருந்து பணிகளைத் திட்​ட​மிட்​டுச் செயல்​படுத்தி, முடித்​துத்​தரும் இடத்தை நோக்கி வேக​மாக வளர்ந்​து​வரு​கிறது. இந்த மாற்​றத்​தைப் பரவலாக்​கும் கரு​வி​களுள் ஒன்​றாக Cursor திகழ்​கிறது. இணை​யத்​தளம்: https://cursor.com/

எடுத்​துக்​காட்​டாக ஒரு கட்​டளை:

Create a simple personal portfolio website using HTML, CSS, and JavaScript. Include my name, a short introduction, education, skills, projects, and contact details. Make the website visually attractive, user-friendly, and mobile-responsive. Use a modern design with suitable colours and fonts. Create all the necessary files and explain how to run the website locally.

செய்​யறிவு விதி: உங்​களுக்​கான நிரலை நீங்​களே எழுதுங்​கள். அதில் உள்ள பிழைகளைத் திருத்​தவும் (Debug) குறியீட்​டைச் செப்​பனிட​வும் செய்​யறிவைப் பயன்​படுத்​துங்​கள். இதன் மூலம் உங்​கள் நிரலாக்​கத் திறன் வளர்ச்​சி​யடையும். செய்​யறிவு தரும் நிரலை, தகுந்த மாதி​ரித் தரவு​களைக் (Test cases) கொண்டு நன்​றாகச் சோதித்​துப் பாருங்​கள். பரிசோதிக்​கப்​படாத நிரல் ஆபத்தானது.

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்​நுட்ப எழுத்​தாளர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT