தொழில்நுட்பம்

குரல் கொடுத்​தால் பெயர் சொல்லும் | எளிதில் கற்கலாம் ஏஐ 31

சரவணன் பார்த்தசாரதி

இயற்கை ஆர்​வலர்​களும் பறவை நோக்​கர்​களும் காடுகள், பூங்​காக்​கள், நீர்​நிலைகளுக்​குச் சென்று, அங்​கிருக்​கும் பல்​வேறு பறவை​களை அடை​யாளம் காண முயல்​கிறார்​கள். ஆனால், அவற்​றின் பெயர்​களை​யும் இனங்​களை​யும் கண்​டறிவது அவ்​வளவு எளிதான காரியமல்ல. குறிப்​பாக, மரங்​களுக்​குள் மறைந்​திருக்​கும் பறவை​களை அவற்​றின் குரலைக் கொண்டு மட்​டும் அடை​யாளம் காண்​பது சவாலான விஷயம். இதற்கு உதவும் வித​மாக வடிவ​மைக்​கப்​பட்​டுள்ள இல​வசச் செயலிதான் Merlin Bird ID.

அமெரிக்​கா​வின் கார்​னெல் பல்​கலைக்​கழகத்​தைச் சேர்ந்த Cornell Lab of Ornithology உரு​வாக்​கிய இந்​தச் செயலி, இயந்​திரக் கற்​றல், கணி​னிப் பார்வை, ஒலிப் பகுப்​பாய்வு ஆகிய​வற்​றுடன் ‘eBird’ பறவைக் கண்​காணிப்​புத் தரவு​களை​யும் ஒன்​றிணைத்​துச் செயல்​படு​கிறது.

ஒலி வழி பறவை அடை​யாளப்​படுத்​து​தல் (Sound ID)

பறவை​கள் மரக்​கிளைகளுக்​குள் மறைந்​திருந்​தா​லும் அவற்​றின் கீச்​சொலியை திறன்​பேசி​யின் மைக்ரோஃபோன் மூலம் பதிவு செய்​ய​லாம். செய்​யறிவு அந்த ஒலியைப் பகுத்​தறிந்து, சாத்​தி​ய​மான பறவை இனங்​களின் பெயர்​களை உடனுக்​குடன் பரிந்​துரைக்​கிறது.

புகைப்​படம் வழி அடை​யாளப்​படுத்​து​தல் (Photo ID)

பறவை​யின் புகைப்​படத்​தைச் செயலி​யில் பதிவேற்​றினால், கணி​னிப் பார்​வைத் தொழில்​நுட்​பம் அதன் உடல் வடிவம், இறகு​களின் நிறம், தோற்ற அமைப்பு ஆகிய​வற்​றைப் பகுப்​பாய்வு செய்து பொருந்​தக்​கூடிய பறவை இனங்​களைப் பரிந்​துரைக்​கிறது. இத​னால் பறவை​களைப் பற்​றிய முன் அனுபவம் இல்​லாதவர்​களும் அவற்றை எளிதாக அறிந்​து​கொள்ள முடியும்.

கேள்​வி​கள் மூலம் அடை​யாளப்​படுத்​து​தல் (Bird ID Wizard)

ஒளிப்​படமோ ஒலிப்​ப​திவோ இல்​லாத சூழலில், பறவை​யின் அளவு, நிறம், நடத்தை தொடர்​பான எளிய கேள்​வி​களுக்​குப் பதிலளிக்க வேண்​டியதிருக்​கும். அவற்​றுடன், பறவையைப் பார்த்த இடம், தேதி​யையும் கருத்​தில் கொண்டு சாத்​தி​ய​மான பறவை இனங்​களைச் செயலி பரிந்​துரைக்​கிறது.

இணை​யமின்​றிப் பயன்​படுத்​து​தல் (Offline Bird Packs)

உல​கின் பல்​வேறு பகுதி​களுக்​கான பறவைத் தகவல் தொகுப்​பு​களை முன்​கூட்​டியே பதி​விறக்​கம் செய்​யும் வசதி இதிலுள்​ளது. இதன் மூலம் இணைய இணைப்பு இல்​லாத காடுகளி​லும் மலைப்​பகுதி​களி​லும் இந்த வசதி​களைப் பெற முடியும். இருப்​பினும், அனைத்​துப் பறவை இனங்​களுக்​கான ஒலியையும் இணை​யமற்ற நிலை​யில் அடை​யாளப்​படுத்​தி​விட இய​லாது என்​ப​தைக் கவனத்​தில்​கொள்ள வேண்​டும்.

விரிவான பறவைத் தகவல்​கள் (Species Profiles)

பறவை​களின் புகைப்​படங்​கள், குரல் பதிவு​கள், வாழ்​விட வரைபடங்​கள் (Range Maps), அடை​யாள அம்​சங்​கள் இந்​தச் செயலி​யில் வழங்​கப்​படு​கின்​றன. இந்​தத் தகவல்​கள் மாணவர்​களுக்​கும் இயற்கை ஆர்​வலர்​களுக்​கும் பறவை​களின் தனித்​து​வத்​தைப் புரிந்​து​கொள்ள உதவு​கின்​றன.

பிற கரு​வி​களில் இருந்து இது எவ்​வாறு வேறு​படு​கிறது?

மர​பான வழிகாட்​டிப் புத்​தகங்​கள், பறவை​களின் புகைப்​படங்​கள், தோற்​றம், வாழ்​விடத் தகவல்​களைக் கொண்டு அவற்றை அடை​யாளம் காண உதவு​கின்​றன.

Merlin Bird ID செயலியோ பறவை​களின் குரலை நிகழ்​நேரத்​தில் பகுப்​பாய்வு செய்​தல், புகைப்​படங்​களின் மூலம் இனங்​களைப் பரிந்​துரைத்​தல், கேள்​வி​கள் மூலம் அடை​யாளம் காண உதவுதல், இணைய இணைப்​பின்​றிப் பயன்​படுத்​து​தல் உள்​ளிட்ட பல்​வேறு வசதி​களை ஒரே இடத்​தில் வழங்​குகிறது. இத​னால் பறவை நோக்​கலில் முன் அனுபவம் இல்​லாதவர்​களும் பறவை​களைப் பற்றி அறிந்​துகொள்ள முடி​கிறது. மேலும், காணும் பறவை​களை eBird தளத்​தில் பதிவு செய்​வதன் மூலம் பறவை​யியல் தொடர்​பான ஆய்​வு​களுக்​கும் மக்​கள் தங்​களாலான பங்​களிப்பை அளிக்க இயலும்.

யாருக்​குப் பயன்​படும்?

பறவை ஆராய்ச்​சி​யாளர்​கள், வனவிலங்கு புகைப்​படக் கலைஞர்​கள், சூழலியல் மாணவர்​கள், இயற்கை ஆர்​வலர்​கள், குழந்​தைகளுக்​குப் பறவை​களை அறி​முகப்​படுத்த விரும்​பும் பெற்​றோர் இதைப் பயன்​படுத்​தலாம். செய்​யறிவையும் பறவை​யியலை​யும் இணைக்​கும் Merlin Bird ID, பல்​லுயிர்ப் பாது​காப்பு குறித்த விழிப்​புணர்வை பொது​மக்​களிடையே வளர்க்​கப் பெரிதும் உதவு​கிறது.

செய்​யறிவு விதி: செய்​யறிவு தரும் கருத்​துகளைப் புத்​தகங்​கள் அல்​லது அதி​காரப்​பூர்​வத் தளங்​களில் சரிபாருங்​கள். அவற்​றுக்​கான சான்​றுகள் உள்​ளனவா என்​பதை உறுதிசெய்து கொள்​ளுங்​கள். உண்​மைத் தகவல்​கள்​தான் நம்​முடைய படைப்​பு​களுக்​கான உயிர்​நாடி என்​பதை ஒருபோதும் மறக்காதீர்கள்.

இணையத்தளம்: https://www.merlinbirds.org

தர​விறக்க: https://play.google.com/store/apps/details?id=com.labs.merlinbirdid.app

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்​நுட்ப எழுத்​தாளர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT