தொழில்நுட்பம்

விரல் நுனியில் வரலாறு | எளிதில் கற்கலாம் ஏஐ 30

சரவணன் பார்த்தசாரதி

உல​கெங்​கிலும் உள்ள புகழ்​பெற்ற அருங்​காட்​சி​யகங்​கள், வரலாற்​றுச் சின்​னங்​கள், அரிய ஓவியங்​களை நேரில் சென்று பார்ப்​பது அனைவருக்​கும் சாத்​தி​யமல்ல. இந்த இடைவெளியைக் குறைத்து, உல​கின் கலை, பண்​பாட்​டுப் பொக்​கிஷங்​களை இணை​யத்​தின் வழி​யாக அனைவரிடமும் கொண்​டுசேர்க்​கும் தளம்​தான் ‘Google Arts & Culture.’

கூகுள் நிறு​வனத்​தின் வணிக நோக்​கமற்ற முயற்​சி​யின் ஒரு பகுதி​யாக உரு​வாக்​கப்​பட்​டுள்ள இந்​தத் தளம், உயர் தெளிவுத்​திறன் கொண்ட டிஜிட்​டல் படங்​கள், 360 டிகிரி மெய்​நிகர் சுற்​றுலாக்​கள், முப்​பரிமாண மாதி​ரி​கள், செய்​யறிவு சார்ந்த சிறப்பு அம்​சங்​கள் ஆகிய​வற்றை ஒருங்​கிணைத்​துச் செயல்​படு​கிறது. இந்​தத் தளத்​தின் வழியே கட்​ட​ணமில்​லாமல் உல​கக் கலை, வரலாறு, பண்​பாட்டை நம்​மால் அறிந்​து​கொள்ள முடியும்.

ஓவிய நுணுக்​கங்​களை ஆராய உதவும் ஆர்ட் கேமரா

வின்​சென்ட் வான் கோ போன்ற புகழ்​பெற்ற ஓவியர்​களின் படைப்​பு​களை மிக உயர்ந்த தெளிவுத்​திறனில் பார்ப்​ப​தற்கு ‘ஆர்ட் கேமரா’ தொழில்​நுட்​பம் உதவு​கிறது. தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ஓவியங்​களில் உள்ள நுண்​ணிய தூரி​கைத் தடங்​கள், வண்​ணக் கல​வை​கள் உள்​ளிட்​ட​வற்றை இதன் மூலம் பெரிதாக்​கிப் பார்க்க முடியும்.

செய்​யறிவு மூலம் கலையை அறிதல்

இந்​தத் தளத்​தில் இயந்​திரக் கற்றலையும், செய்யறிவையும் பயன்​படுத்​தும் பல்​வேறு பரிசோதனை அம்​சங்​கள் இடம்​பெற்​றுள்​ளன. குறிப்​பாக, ஆர்ட் செல்ஃபி என்​கிற அம்​சம் நம் புகைப்​படத்தை அருங்​காட்​சி​யகங்​களின் ஓவியங்​களில் இடம்​பெறும் முகங்​களு​டன் ஒப்​பிட்டு, தோற்​றத்​தில் ஒற்​றுமையுள்ள கலைப்​படைப்​பு​களைக் கண்​டறிய உதவு​கிறது.

மேலும், ஆர்ட் செல்ஃபி 2 என்​கிற செய்​யறிவு வசதி, நமது புகைப்​படத்​தைத் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட கலை, வரலாற்​றுப் பின்​னணிகளு​டன் இணைத்​துப் புதிய படங்​களை உரு​வாக்​கு​கிறது.

அருங்​காட்​சி​யகங்​களை​யும் வரலாற்​றுச் சின்​னங்​களையும் பார்​வை​யிட...

மெய்​நிகர் சுற்​றுலா, 360 டிகிரி காட்​சிகள், முப்​பரிமாண மாதி​ரி​கள் மூலம் உல​கின் பல்​வேறு பண்​பாட்டு இடங்​களை வீட்​டி​லிருந்தே காணலாம். ‘பாக்​கெட் கேலரி’ என்​கிற அம்​சம், ஆக்​மென்​டட் ரியாலிட்டி (Augmented Reality – AR) தொழில்​நுட்​பத்​தின் உதவியுடன் திறன்​பேசிகளில் நமது அறை​யிலேயே ஒரு மெய்​நிகர் கலைக்​கூடம் இருப்​பது போன்ற அனுபவத்தை வழங்கு​கிறது.

கதைகள் மூலம் கற்​றல்

கலை​யையும் வரலாற்​றையும் படிப்​ப​தோடு மட்​டுமல்​லாமல், அனுபவித்​துக் கற்​கவும் இந்​தத் தளம் வாய்ப்பளிக்கிறது. வரலாற்று நிகழ்​வு​கள், பாரம்​பரிய ஆடைகள், கட்​டிடக்​கலை, இசை, பண்​பாடுகளைப் பற்​றிய விளக்​கக் கட்​டுரைகள், காணொளி​கள், தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ஆடியோ வழிகாட்​டிகள், புதிர் விளை​யாட்​டுகள் ஆகிய​வையும் இதில் இடம்​பெற்​றுள்​ளன.

கால​வரிசையும் கலை இயக்​கங்​களும்

இந்​தத் தளத்​தில் கலைப்​படைப்​பு​களை அவை உரு​வான காலம், கலைஞர்​கள், கலை இயக்​கம், வரலாற்று நிகழ்​வு​கள் போன்ற பல்​வேறு அடிப்​படைகளில் தேடலாம். உதா​ரண​மாக, சர்​ரியலிசம் (Surrealism) போன்ற கலை இயக்​கங்​களைத் தேர்ந்​தெடுத்து அவற்​றுடன் தொடர்​புடைய ஓவியங்​களை​யும் கலைஞர்​களை​யும் அறிந்து​ கொள்​ளலாம். இந்த வசதி, கலை வரலாற்​றின் வளர்ச்​சி​யையும் வெவ்​வேறு காலக்​கட்​டங்​களின் கலைப் பாணிகளை​யும் ஒப்​பிட்டு அறிய உதவு​கிறது.

இணை​யத் தேடலில் இருந்து இது எவ்​வாறு வேறு​படு​கிறது?

சாதா​ரண இணை​யத் தேடுபொறிகள் ஓவியங்கள், அருங்காட்சியகங்கள், வரலாற்றுச் சின்னங்கள் பற்றிய படங்களையும் தகவல்களையும் கண்டறிய உதவுகின்றன. ஆனால் Google Arts & Culture தளமோ, பல்வேறு டிஜிட்டல் தொகுப்புகளை ஒரே இடத்தில் ஆராயும் வாய்ப்பை வழங்குகிறது.

யாருக்குப் பயன்படும்?

வரலாறு, நுண்கலை, தொல்லியல், கட்டிடக்கலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், வடிவமைப்பாளர்கள், பண்பாடுகளை அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தத் தளம் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, ஆசிரியர்கள் வகுப்பறைகளில் வரலாற்றுச் சின்னங்கள், கலைப்படைப்புகள், பண்பாட்டு மரபுகளை மாணவர்களுக்குக் காட்சிப்படுத்தி விளக்குவதற்கு இதைப் பயன்படுத்தலாம்.

உலகின் கலை, கலாச்சாரப் பாரம்பரியத்தை டிஜிட்டல் வடிவில் ஆவணப்படுத்தி, பொதுமக்களிடமும் கொண்டுசேர்ப்பதில் சிறப்புறச் செயல்படுகிறது Google Arts & Culture தளம்.

இணையத்தளம்: https://artsandculture.google.com/

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்​நுட்ப எழுத்​தாளர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT