தொழில்நுட்பம்

போவோமா ஊர்​கோலம் | எளிதில் கற்கலாம் ஏஐ 29

சரவணன் பார்த்தசாரதி

விடு​முறை நாள்​களில் எங்கே செல்​வது, எந்​தெந்த இடங்​களைப் பார்​வை​யிடுவது, எங்கே தங்​கு​வது போன்ற கேள்​வி​களுக்​குப் பதிலளித்து, பயணத் திட்​ட​மிடலை எளிதாக்​கும் செய்​யறி​வுத் தளம்​தான் Mindtrip. பயனர்​களின் விருப்​பங்​களுக்கு ஏற்ப சுற்​றுலாத் தலங்​கள், உணவகங்​கள், தங்​குமிடங்​கள், பயண வழித்​தடங்​கள் ஆகிய​வற்​றைப் பரிந்​துரைத்து, முழு​மையான பயணத் திட்​டத்தை உரு​வாக்க உதவு​கிறது.

செய்​யறிவு (Artificial Intelligence), இயற்கை மொழிச் செய​லாக்​கம் (NLP) போன்ற தொழில்​நுட்​பங்​களைப் பயன்​படுத்​தும் இந்​தத் தளம், பயணம் தொடர்​பான தகவல்​களை ஒரே இடத்​தில் ஒருங்​கிணைக்​கிறது.

பயனருக்கு ஏற்ற பயணத் திட்​டங்​கள் (Personalized Itineraries)

பயணம் செய்ய விரும்​பும் இடம், நாள்​கள், பட்​ஜெட், தனிப்​பட்ட விருப்​பங்​கள் ஆகிய​வற்​றைக் குறிப்​பிட்​டால், அதற்​கேற்ப நாள்​வாரியான பயணத்​திட்​டத்தை இது உரு​வாக்​கு​கிறது. உதா​ரண​மாக, குடும்​பத்​துடன் மூன்று நாள்​கள் சென்னை செல்ல விரும்​புவோர், குழந்​தைகளுக்கு ஏற்ற சுற்​றுலாத் தலங்​களை​யும் உணவகங்​களை​யும் எளி​தில் கண்​டறிய​லாம்.

ஊடாடும் வரைபடங்​கள் (Interactive Maps)

பரிந்​துரைக்​கப்​படும் இடங்​களின் புகைப்​படங்​கள், மதிப்​புரைகள், வரைபடங்​களை (Maps) ஒரே இடத்​தில் பார்க்​கலாம். அருகருகே உள்ள சுற்​றுலாத் தலங்​களை அறிந்​து​கொள்​ளவும் அவற்​றுக்கு இடையேயான பயணத்​தொலைவை மதிப்​பிட​வும் இது உதவு​கிறது.

பல​வகை உள்​ளடக்க உள்​ளீடு (Multimodal Content Ingestion)

சமூக ஊடகங்​களில் பார்க்​கும் சுற்​றுலாக் காணொளி​கள், இணை​யதளக் கட்​டுரைகள், ஒளிப்​படங்​கள், பயணக் குறிப்​பு​களைப் பயன்​படுத்தி புதிய பயணத் திட்​டங்​களை உரு​வாக்​கவும் இதில் வசதி​யிருக்​கிறது. எடுத்​துக்​காட்​டாக, யூடியூப் காணொளி​யில் இடம்​பெறும் சுற்​றுலாத் தலங்​களை அடை​யாளம் கண்டு, அவற்​றைப் பயணத் திட்​டத்​தில் இணைக்க முடியும்.

குழுப் பயணங்​கள்

நண்​பர்​கள், குடும்ப உறுப்​பினர்​களு​டன் ஒரே பயணத் திட்​டத்​தைப் பகிர்ந்து, இணைந்து மாற்​றங்​களைச் செய்​ய​லாம். ஒவ்​வொரு​வரும் விரும்​பும் இடங்​களைச் சேர்த்து, அனைவருக்​கும் ஏற்ற பயணத்​தைத் திட்​ட​மிட இது உதவு​கிறது.

முன்​ப​திவு வசதி (Booking Assistance)

விமானங்​கள், விடுதி​கள், சுற்​றுலா அனுபவங்​களுக்​கான முன்​ப​திவு வாய்ப்​பு​களை​யும் இதன் வழியே அறிய​வும், முன்​ப​திவு செய்​ய​வும் முடியும். பயண முன்​ப​திவு​கள் தொடர்​பான விவரங்​களை ஒரே இடத்​தில் அணுகும் வசதி​யும் உள்​ளது.

உரையாடல் மூலம் திட்​டங்​களை மாற்​றுதல்

ஏற்​கெனவே உரு​வாக்​கப்​பட்ட பயணத் திட்​டத்​தைச் சாதா​ரண உரையாடல் (Chat) வழியே எளி​தில் மாற்​றலாம். எடுத்​துக்​காட்​டாக, ‘முதல் நாள் அருங்​காட்​சி​யகத்​துக்​குப் பதிலாகக் கடற்​கரைக்​குச் செல்ல வேண்​டும்’ என்று கேட்​டால், அதற்​கேற்​பப் பயணத் திட்​டத்தை மாற்​றியமைக்க உதவு​கிறது.

பயண வழித்​தடங்​களும் பரிந்​துரைகளும்

அரு​கிலுள்ள சுற்​றுலாத் தலங்​கள், பயணத் தொலைவு, பயண வழித்​தடங்​கள் போன்​றவற்​றைக் கருத்​தில்​கொண்டு திட்​ட​மிடும் வசதி​யையும் இந்​தத் தளம் வழங்​கு​கிறது. மேலும், பயண விருப்​பங்​களை நினைவில் வைத்து எதிர்​காலப் பயணங்​களுக்​கும் பொருத்​த​மான பரிந்​துரைகளை வழங்​கு​கிறது.

பிற கரு​வி​களில் இருந்து இது எவ்​வாறு வேறு​படு​கிறது?

பொது​வான பயண வழிகாட்​டித் தளங்​கள் வெறும் பட்​டியல்​களை மட்​டுமே காட்​டும். நமக்​கேற்​றபடி முழு​மையான பயணத் திட்​டத்தை உரு​வாக்​கவும், மாற்​றியமைக்​கவும் அவற்​றில் வாய்ப்​பு​கள் குறைவு. செய்​யறி​வின் துணை​யுடன் செயல்​படும் Mindtrip தளமோ, பயணத் திட்​ட​மிடலில் தொடங்கி, வரைபட ஒருங்​கிணைப்பு, நேரடி முன்​ப​திவு வரை அனைத்​தையும் ஒரே இடத்​தில் வழங்​கு​கிறது.

யாருக்​குப் பயன்​படும்?

தனியாகப் பயணம் செய்​வோர், குடும்​பத்​துடனும் நண்​பர்​களு​டனும் சுற்​றுலா செல்​பவர்​கள், பயண ஆலோ​சகர்​களுக்கு இந்​தத் தளம் பயனுள்​ள​தாக இருக்​கும். இருப்​பினும், பயனர்​கள் செய்​யறிவு தரும் நேரம், கட்​ட​ணங்​கள், முன்​ப​திவு விவரங்​களை அதி​காரபூர்​வத் தளங்​களில் சரிபார்த்​துக்​கொள்​வது அவ​சி​யம். அதன் வழியே, பயணத்​தின்​போதான எதிர்​பாரா நிகழ்​வு​களை​யும் ஏமாற்​றங்​களை​யும் தவிர்க்​கலாம். பயணத் திட்​ட​மிடலில் செல​விடும் நேரத்​தைக் குறைத்து, புதிய இடங்​களை எளிதாகக் கண்​டறிய உதவும் டிஜிட்​டல் பயண உதவியாளராக Mindtrip செயல்படுகிறது இணை​யதளம்: https://mindtrip.ai/

எடுத்​துக்​காட்​டாக ஒரு கட்​டளை: நான் சென்​னை​யில் இருந்து ஊட்​டிக்கு மூன்று நாள்​கள் தனியாகப் பயணம் செய்ய விரும்​பு​கிறேன். எனது மொத்த பட்​ஜெட் ரூ. 12,000. இயற்​கைக் காட்​சிகள், வரலாற்​றுச் சிறப்​புமிக்க இடங்​களைப் பார்க்க விரும்​பு​கிறேன். பாது​காப்​பான தங்​குமிடங்​கள், போக்​கு​வரத்து வசதி​கள், சுற்​றுலாத் தலங்​கள், உணவகங்​கள், நுழைவுக் கட்​ட​ணங்​கள், தோராய​மான செல​வு​களு​டன் நாள் வாரியான பயணத்​திட்​டத்தை உரு​வாக்​கவும். ஒவ்​வொரு இடத்​துக்​குமான வரைபட இணைப்​பு​கள், பயண நேரம், பாது​காப்பு ஆலோ​சனைகளையும் சேர்க்கவும்.

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்​நுட்ப எழுத்​தாளர்

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT