தொழில்நுட்பம்

செஸ் வீரர்​களை அடுத்த கட்டத்துக்கு உயர்த்து​கிறது | எளிதில் கற்கலாம் ஏஐ 26

சரவணன் பார்த்தசாரதி

உல​கெங்​கிலும் உள்ள கோடிக்​கணக்​கான வீரர்​களை​யும் ஆர்​வலர்​களை​யும் இணைக்​கும் மிகப்​பெரிய இணை​ய​வழி செஸ் தளம்​தான் Chess.com. விளை​யாட வாய்ப்​பளிப்​பது, கற்​பிப்​பது ஆகிய​வற்​றைக் கடந்து, இந்​தத் தளம் தற்​போது அதிநவீனச் செய்​யறி​வுத் தொழில்​நுட்​பங்​களைப் பயன்​படுத்தி வீரர்​களின் திறனை அடுத்த கட்​டத்​துக்கு உயர்த்​தவும் உதவு​கிறது.

தொடக்​கநிலை​யாளர்​கள் முதல் கிராண்ட்​மாஸ்​டர்​கள் வரை அனைவருக்​கும் ஏற்ற வகை​யி​லான விளை​யாட்​டுகள், புதிர்​கள், செய்​யறிவு சார்ந்த வழிகாட்​டல்​களை இந்​தத் தளம் வழங்​கு​கிறது.

பாட்​களும் இயந்​திரங்​களும் (Bots & Chess Engines)

பல்​வேறு திறன்​கள் கொண்ட பல நூறு செய்​யறிவு செஸ் பாட்​களு​டன் (Chess Bots) பயனர்​கள் எப்​போது வேண்​டு​மானாலும் விளை​யாடிப் பயிற்சி பெறலாம். திறன்​மிகுந்த Komodo போன்ற இயந்​திரங்​கள் இதன் பின்​னணி​யில் உள்​ளன.

மதிப்​பாய்​வும் பயிற்​சி​யாளர்​களும் (AI Game Review & Coach)

நாம் விளை​யாடி முடித்த போட்​டியை, செய்​யறி​வுப் பகுப்​பாய்வு இயந்​திரம் நகர்வு வாரியாக ஆய்வு செய்​கிறது. எந்த நகர்வு தவறானது, எது சிறப்​பானது என்​பதை விளக்கி, எப்​படி மேம்​படுத்​திக் கொள்ள வேண்​டும் என்​ப​தற்​கான ஆலோ​சனைகளை​யும் இது வழங்​கு​கிறது. இதற்​காக இந்​தத் தளம் ‘Stockfish’ சதுரங்க இயந்​திரத்​தைப் பயன்​படுத்து​கிறது.

ஏமாற்று வேலைகளைத் தடுத்தல் (AI Fair Play & Anti-Cheating)

விளை​யாட்​டின்​போது நேர்​மையை உறுதிசெய்​வதற்​காக, வீரர்​களின் நகர்​வுத் தர​மும், முடிவு எடுக்​கும் நேர​மும் இயந்​திரக்​கற்​றல் வழிமுறைகள் வழியே பகுப்​பாய்வு செய்​யப்​படு​கின்​றன. சந்​தேகத்​திற்​குரிய கணக்​கு​கள் நிபுணர்​களாலும் ஆய்வு செய்​யப்​படு​கின்​றன. விதி​மீறல்​கள் உறுதிசெய்​யப்​பட்​டால், சம்​பந்​தப்​பட்ட கணக்​கு​கள் மீது தடை உள்​ளிட்ட நட​வடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

புதிர்​களும் பாடங்​களும் (Puzzles & Lessons)

தனிப்​பட்ட தந்​திரங்​களைக் கற்​றுத்​தரும் ஆயிரக்​கணக்​கான செஸ் புதிர்​களும், அனைத்து நிலைகளுக்​கும் ஏற்ற பாடங்​களும் இதில் உள்​ளன.

புள்​ளி​விவரங்​களும் பகுப்​பாய்​வும் (Advanced Stats)

வீரர்​களின் வெற்றி விகிதங்​கள், பல​வீனமான கட்​டங்​கள், எந்​தெந்த இடங்​களில் (Openings) அதி​க​மான பிழைகளைச் செய்​கிறார்​கள் என்​ப​தையெல்​லாம் காட்​டும் விரிவான புள்​ளி​விவர அறி​விக்கை இதன் இன்​னொரு சிறப்​பாகும்.

போட்டி சார்ந்த செய்​தி​கள் (Global Events & News)

சர்​வ​தேச நிகழ்​வு​கள், உயர்​தரப் போட்​டிகளைப் பின்​தொடரவும், செஸ் சார்ந்த அண்​மைச் செய்​தி​களை உடனுக்​குடன் தெரிந்​து​கொள்​ளவும் சிறப்​புப் பகுதி​கள் உள்​ளன. மேலும் உல​களாவிய போட்​டிகளை நேரலை​யில் காணும் வசதி​யும் இதில் வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்​தத் தளத்​தில் அடிப்​படை வசதி​கள் கட்​ட​ணமின்​றிக் கிடைத்​தா​லும், விரிவான செய்​யறி​வுப் பகுப்​பாய்வு, தனிப்​பயன் பயிற்சி வசதி உள்​ளிட்​ட​வற்​றைப் பயன்​படுத்​தக் கட்​ட​ணம் செலுத்த வேண்​டி​யிருக்​கும்.

பிற கரு​வி​களி​லிருந்து இது எவ்​வாறு வேறு​படு​கிறது?

பாரம்​பரிய​மான செஸ் பல​கைகளைப் பயன்​படுத்தி விளை​யாட மட்​டுமே முடியும். பயனர் தாம் விளை​யாடிய விதத்​தைப் பகுப்​பாய்வு செய்து திருத்​திக் கொள்ள முடி​யாது. ஏனைய சில ஆன்​லைன் செஸ் தளங்​களில் விளை​யாடும், புதிர்​களுக்​குத் தீர்வு காணும், நகர்​வு​களைப் பகுப்​பாய்வு செய்​யும் வசதி​கள் உள்​ளன.

ஆனால், Chess.com தளம் பல்​வேறு திறன்​களைக் கொண்ட சதுரங்க பாட்​கள், மெய்​நிகர் பயிற்​சி​யாளர்​கள், நகர்வு வாரியான விளக்​கங்​கள், ஒழுங்​கமைக்​கப்​பட்ட பாடங்​கள், விளை​யாட்​டுச் செயல்​திறன் மதிப்​பீடுகள் ஆகிய​வற்றை ஒருங்​கிணைத்து ஒரே இடத்​தில் வழங்​கு​கிறது. இதன் மூலம் பயனர்​கள் விளை​யாடுவதோடு தங்​களது தவறுகளை​யும் கண்​டறிந்து, படிப்​படி​யாகத் திறனை மேம்​படுத்​திக் கொள்ள வாய்ப்​புக் கிடைக்​கிறது.

யாருக்கு இது மிகவும் பயன்​படும்?

செஸ் கற்க விரும்​பும் குழந்​தைகள், மாணவர்​கள், தொழில்​முறை வீரர்​கள். செஸ் கலையை எளிமையாகக் கற்​றுத் தரு​வதோடு, வீரர்​களின் திறனை மேம்​படுத்​து​வதிலும் Chess.com தளம் இன்​றியமையாத பங்கை வகிக்​கிறது.

செய்யறிவு விதி

செய்​யறிவு தரும் நீண்ட விளக்​கங்​களைச் சுருக்கி உங்​கள் குறிப்​பேட்​டில் எழுதுங்​கள். எழுது​வது நினைவாற்​றலைப் பெரு​மளவு அதி​கரிக்​கும். செய்​யறி​வுக் குறிப்​பு​களில் இருந்து உங்​களுக்​கான சொந்​தப் பாடப்​புத்​தகத்தை உரு​வாக்​கிக்​கொள்​ளுங்​கள். அது உங்​கள் புரிதலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.

https://www.chess.com/

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்​நுட்ப எழுத்​தாளர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT